ராமநவமி கொண்டாட்டத்தில் அத்துமீறல்.. மசூதி மீது காவி கொடியை பறக்கவிட்ட இந்துத்துவா அமைப்பினர்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் ராமநவமி கொண்டாட்டத்தில் இந்துத்துவா அமைப்பினர் அத்துமீறியுள்ள சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த கொண்டாட்டத்தின்போது, மசூதியில் இந்துத்துவா அமைப்பினர் காவி கொடியை ஏற்றியுள்ளனர்.
மசூதி மீது காவி கொடியை ஏற்றிய இந்துத்துவா அமைப்பினர், மசூதியை இடித்துவிட்டு அங்கு கோயில் கட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாகிராஜ் பகுதியில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. நேற்றைய தினம் உத்தரப் பிரதேசத்தில் ராமநவமி கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது. இந்த கொண்டாடட்டத்தில பங்கேற்றிருந்த இந்துத்துவா அமைப்பினர், பிரயாகிராஜில் உள்ள சையது சலார் காஜி மசூதி மீது திடீரென ஏற தொடங்கினர். ஜெய் ஸ்ரீராம் முழக்கங்களுடன் மசூதி மீது ஏறிய அவர்கள், அங்கிருந்த பச்சை கொடியை பிடுங்கிவிட்டு அதற்கு பதிலாக காவி கொடியை பறக்கவிட்டிருக்கின்றனர்.
பின்னர் மசூதியிலிருந்து பைக் பேரணி நடத்தியிருக்கிறார்கள். இது தொடர்பான வீடீயோ காட்சிகள் சோஷியல் மீடியாக்களில் வேகமாக ஷேராகி வருகிறது. பலரும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.
உத்தரப் பிரதேசத்தில் மட்டுமல்லாது மகாராஷ்டிரா மாநிலத்திலும் இதுபோன்ற சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது. மகாராஷ்டிராவின் ரஹூரி மாவட்டத்தில் மார்ச் 26-ம் தேதி இந்த சம்பவம் நடந்தது. ஹஸ்ரத் அமீது சிஷ்டி என்கிற மசூதி மீது திடீரென ஏறிய இந்துத்துவா கும்பல், மசூதி மீது பறந்துக்கொண்டிருந்த பச்சை கொடியை அகற்றிவிட்டு, அதற்கு பதிலாக காவி கொடியை பறக்கவிட்டிருக்கிறார்கள். இந்த சம்பவத்தின்போது அவர்கள் ஜெய் ஸ்ரீராம் என்று முழங்கியுள்ளனர்.
இந்த இரண்டு சம்பவங்களும் இந்து-இஸ்லாமியர்கள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, சம்பவம் நடந்த பகுதியில் கூடுதல் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். இருந்தாலும் இதுவரை இந்த விவகாரத்தில் யாரும் கைது செய்யப்படவில்லை. இந்த சம்பவத்தோடு கல்வீச்சு சம்பவமும் நடந்திருக்கிறது. அதன் மீதும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications