தங்கள் மனைவிகளை சகோதரி என அழைக்க கூறி சீடர்களை சித்ரவதை செய்த ராம்ரஹீம்: பகீர் தகவல்
20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள சாமியார் ராம் ரஹீம் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹரியானா: 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள சாமியார் ராம் ரஹீம் மீது மேலும் ஒரு கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இரண்டு பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இருப்பினும் சாமியார் ராம் ரஹீம் குறித்து நாள்தோறும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றனர். சாமியார் ராம் ரஹீம் ஒரு செக்ஸ் அடிமை என அவரது சீடர்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.

ஓரினச்சேர்க்கையாளராக மாற்றம்
சீடர்கள் பலரையும் அவர் பாலியல் துன்புறுத்தல் செய்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது சித்ரவதையில் இருந்து தப்பிக்க நினைக்கும் சீடர்களை அவர் ஓரினச் சேர்க்கையாளராக மாற்றியதாக அவரது சீடர் ஒருவர் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.

சீடர்களுக்கு ஆண்மை நீக்கம்
தனது சீடர்களை ஓரினச் சேர்க்கையாளராக மாற்றிவிட்டால் அவர்களை தங்களின் அடிமைகளாக வைத்திருக்கலாம் என்ற நோக்கில் சாமியார் ராம் ரஹீம் இவ்வாறு நடந்து கொண்டதாக தெரியவந்துள்ளது. ஆண் சீடர்களுக்கு ஆண்மை நீக்கமும் செய்துள்ளார் ராம் ரஹீம்.

மனைவிகளை சகோதரி என்றழைக்க
ராம் ரஹீமுக்கு மற்ற ஆண்கள் பொறாமை இருந்ததாகவும் அவரது சீடர்கள் தெரிவித்துள்ளன. மேலும் பல ஆண் சீடர்களை தங்கள் மனைவியை சகோதரி என்று அழைக்க வற்புறுத்தியதாகவும் அவரது முன்னாள் சீடர் குர்தாஸ் சிங் தூர் என்பவர் கூறியுள்ளார்.

ஆண்மை நீக்கத்துக்கு பயந்து
மற்ற பெண் சீடர்களுடன் பழகுபவர்கள் ஆசிரமத்தில் உள்ள அனைவரின் முன்னிலையிலும் அவமானப்படுத்தப்படுவார்கள் என்றும் அவரது முன்னாள் சீடர் கூறியுள்ளார். பலர் ஆண்மை நீக்கம் செய்யப்படுவதை எண்ணி அஞ்சி ஓரினச்சேர்க்கையாளராக மாறியதாகவும் முன்னாள் சீடர்கள் கூறியுள்ளனர்.

நடவடிக்கை எடுக்காத ராம் ரஹீம்
ஓரினச்சேர்க்கை தான் தேராவின் உண்மை முகம் என்றும் ஆண்மை நீக்கத்துக்கு பயந்து பலர் தங்களின் ஆசைகளை தியாகம் செய்து ஓரினச்சேர்க்கையாளராக மாறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பல இளம் சீடர்கள் ஆசிரமத்தில் சித்ரவதை செய்யப்பட்ட போதும் அதுகுறித்து ராம் ரஹீம் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்றும் முன்னாள் சீடர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கொலை வழக்குப்பதிவு
இந்நிலையில் ராம் ரஹீம் மீது மேலும் ஒரு கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ராம் ரஹீமின் ஆசிரமத்தில் இருந்து 600 எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications