கட்டுமானம் முடியும் முன்பே ராமர் கோவில் கும்பாபிஷேகமா? விமர்சனங்களுக்கு விளக்கம் அளித்த அதிகாரி
டெல்லி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா அரசியல் நோக்கோடு நடப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில், அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணியை மேற்கொண்ட குழுவின் தலைவர் நிர்பேந்திர மிஸ்ரா இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு சங்கராச்சாரியார்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஜனவரி 22 அன்று அயோத்தியில் ராமர் கோவிலில் சிலை பிரதிஷ்டை செய்ய பூரியின் கோவர்தன் மடத்தின் பீடாதிபதி மறுப்பு தெரிவித்தார். அதேபோல உத்தரகாண்ட் ஜோதிர் மடத்தின் பிரதிநிதி அவிமுக்தேஷ்வரனந்த் சரஸ்வதி இந்த ராமர் கோவில் விழாவில் நிர்வாகிகள் சாஸ்திரத்தை மீறுவதாக புகார் கூறியிருந்தார்.

குறிப்பாக மோடியை விமர்சித்த அவர் கூறுகையில், “நரேந்திர மோடி தனது காசி வழித்தட திட்டத்திற்காக பல நூற்றாண்டுகள் பழமையான கோவில்களை இடித்து அதில் இருந்த சிலைகளை குப்பையில் போட்டார். இந்த விழா "சாஸ்திரங்களுக்கு எதிராக" அல்லது "புனிதமான இந்து வேதங்களுக்கு எதிராக" நடத்தப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார். குறிப்பாக கோவில் கட்டுமானம் முழுமையடையாததால் இது மிகப்பெரிய விதி மீறல் என்று அவர் புகார் வைத்துள்ளார்.
சங்கராச்சாரியார்கள் நாட்டின் நான்கு மூலைகளிலும் உள்ள மடாதிபதிகள் ஆவர். வடக்கில் உத்தரகாண்ட், கிழக்கில் ஒடிஷா, தெற்கில் கர்நாடகா, மேற்கில் குஜராத் என நான்கு திசைகளிலும் உள்ள இந்த சங்கராச்சாரியார்கள் இந்து மதத்தின் மிக உயரிய தலைவர்களாக கருதப்படுகிறார்கள். இந்த நிலையில், ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் அவசரம் காட்டுவதாக சங்கராச்சாரியார்கள் இருவர் எதிர்ப்பு தெரிவித்ததோடு, கும்பாபிகேஷக விழவில் கலந்து கொள்வது இல்லை என அறிவித்துள்ளனர்.
மேலும் இரண்டு சங்கராச்சாரியார்கள் இந்த விவகாரத்தில் அமைதி காத்து வருகிறார்கள். ஒடிஷாவின் பூரி மற்றும் உத்தரகாண்டின் ஜோஷிமத் சேர்ந்த சங்கரச்சார்யாக்கள் கடுமையாக விமர்சனம் முன்வைத்தனர். அரசியல் நோக்கோடு கும்பாபிஷேக விழா நடப்பதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணியை மேற்கொண்ட குழுவின் தலைவர் நிர்பேந்திர மிஸ்ரா இதற்கு விளக்கம் அளித்தார்.
ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு மிஸ்ரா அளித்த பேட்டியில் கூறியதாவது:- சங்கராச்சாரியாக்கள் தர்ம குருக்கள். நான் ஒன்றுமே இல்லை.. சனாதன தர்மத்தை கடைபிடிப்பவர்களுக்கு அவர்கள்தான் பொறுப்பு. இருந்தாலும். நான் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நாங்கள் அறிவித்தது என்னவென்றால் பால ராமர் அதாவது குழந்தை ராமர் கோவிலின் தரை தளத்தில் உள்ளார். தரை தளத்தில் தான் கர்ப்பகிரகம் உள்ளது.
ஐந்து மண்டபங்கள் உள்ளன. உருவப்படம் அமைந்துள்ளது. இவை அனைத்தும் முழுமை அடைந்துவிட்டது. இன்னும் கட்டுமானம் முழுமையாடதது என்னவென்றால் முதல் தளம் தான். முதல் தளம் என்பது ராம தர்பாருக்கானது. அங்கு ராஜா ராம் வருவார்.. அவருடன் சீதா அமர உள்ளார். முதல் தளத்தில் ராமர், சீதா, லக்ஷமன் மற்றும் அனுமான் ஆகியோர் இருப்பார்கள்” என்றார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications