‛‛புல்லரிக்குதே’’.. அயோத்தி ராமர் சிலையின் அழகான சிரிப்பை பாருங்க.. ஏஐ தொழில்நுட்ப வீடியோ வைரல்
அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கருவறையில் உள்ள 5 வயது பால ராமரின் சிலை சிரித்த முகத்துடன் செதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை தொடர்பான வீடியோ, போட்டோக்கள் வெளியாகி இணையதளத்தில் வேகமாக பரவி பக்தர்களை பரவசப்படுத்தி வருகிறது. இந்நிலையில் தான் ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட அயோத்தி பால ராமர் சிலை தொடர்பான வீடியோ வெளியாகி பார்க்கும் அனைவரையும் புல்லரிக்க வைக்கிறது.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. திட்டமிட்டப்படி நேற்றைய தினம் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்து முடிந்தது. கோவில் கருவறையில் கடந்த 18 ம் தேதி நிறுவப்பட்ட 5 வயது பால ராமர் சிலைக்கு பிரதமர் மோடி பிரான் பிரதிஷ்டை சடங்குகளை செய்தார்.

அதன்பிறகு ராமர் சிலையின் கண்கள் திறக்கப்பட்டது. சாந்தமான முகத்தில் புன்முருவல் சிரிப்போடு ராமர் சிலை பக்தர்களுக்கு காட்சியளித்தது. நேற்றைய தினம் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. பக்தர்கள் இன்று முதல் கோவிலில் தரிசனம் செய்து வருகின்றனர்.
காலை 3 மணி முதலே கோவிலில் மக்கள் குவிந்து போட்டி போட்டு கொண்டு கோவிலில் தரிசனம் செய்து வருகின்றனர். காலை 7 மணிக்கு கோவிலில் மக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டபோது அதிகப்படியான கூட்டத்தால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தற்போதைய சூழலில் இன்று 5 லட்சம் பக்தர்கள் வரை தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தான் தற்போது இணையதளங்களில் அயோத்தி ராமர் கோவில் தொடர்பான வீடியோக்கள் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் சிரித்த முகத்துடன் தலையில் கிரீடம், கையில் வில், உடலில் நகைகள் அணிந்து சாந்த முகத்துடன் ராமர் காட்சியளிக்கிறார். இதற்கிடேயே தான் அயோத்தி பால ராமர் சிலை தொடர்பான ஏஐ தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்த வீடியோ என்பது பார்ப்பாரை புல்லரிக்க வைக்கிறது. அதாவது அயோத்தி ராமர் கோவில் கருவறையில் நேற்று பிரதிஷ்டைக்கு பிறகு பால ராமரின் சிலையின் கண்கள் திறக்கப்பட்டன. இந்நிலையில் தான் இந்த சிலை தலை திருப்பி பக்தர்களை நோக்கி அங்கும் இங்கும் பார்த்து கண்களை சிமிட்டி புன்முருவல் செய்தால் எப்படி இருக்கும் என்ற அடிப்படையில் ஏஐ தொழில்நுட்பத்தில் வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது அனைவரையும் கவர்ந்துள்ளது.
அயோத்தி ராமர் கோவில் கருவறையில் வைக்கப்பட்டுள்ள பால பருவ ராமர் சிலையை கர்நாடகா மாநிலம் மைசூரை சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் வடிவமைத்தார். இந்த சிலை கர்நாடகாவின் எச்டி கோட் தாலுகாவில் உள்ள புஜ்ஜேகவுடனபுரா கிராமத்தில் உள்ள பாறையில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. சிலையின் மொத்த உயரம் என்பது 51 இன்ச் ஆகும். 200 கிலோ எடை கொண்டது.
I legit got goosebumps 🔥🔥🔥🔥
— Sunil choudhary (@tadasunil98) January 23, 2024
who did this? 😍🥰#Ram #RamMandir#RamMandirPranPrathistha#RamLallaVirajman #AyodhaRamMandir#Ayodha #EarthquakePH #earthquake pic.twitter.com/HZShK26gSj
இந்த சிலையை சுற்றி அலங்கார வளைவு அமைக்கப்பட்டுள்ளது. அதில் விஷ்ணுவின் 10 அவதார வடிவங்கள் சிற்பமாக இடம்பெற்றுள்ளது. ராமர் விஷ்ணுவின் அவதாரமாக இருப்பதால் இப்படி சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றிய அலங்காரத்தில் சங்கு, சக்கரம், தாமரை, கதை, பிரணவம், சுவத்திகம், போன்ற சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.
சிலையின் கீழ் பகுதியில் நவகிரங்களான சூரியன், புதன், சுக்கிரன், குரு, ராகு கேது, வெள்ளி, சந்திரன், செவ்வாய், சனி உள்ளிட்டவற்றின் சிற்பங்கள் உள்ளன. இதுமட்டுமின்றி ஒவ்வொரு ஆண்டின் ராமநவமி தினத்தில் சூரியஒளி ராமர் சிலையின் நெற்றியின் விழும்படி கருவறை வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications