தாஜ்மஹாலை விட ராமர்பாலம் சிறந்தது! சர்ச்சையை கிளப்பிய கர்நாடக மடாதிபதி.. பரபர பேச்சு
உத்தர கன்னடா: ‛‛இறந்த மனைவியின் நினைவாக ஷாஜகான் தாஜ்மஹால் கட்டியதை விட ராமர் தனது மனைவியை மீட்பதற்காக ராமர் பாலம் கட்டியதே சிறந்தது'' என கர்நாடகத்தில் உள்ள ஸ்ரீராமசந்திரபூர் மடத்தின் மடாதிபதியான ராகவேஸ்வரா சுவாமி பேசினார்.
உத்தர கன்னடா மாவட்டம் குமட்டாவில் பிரகதி வித்யாலயா ராம்லீலா மைதானம் உள்ளது. இங்கு ராமர் கதை மற்றும் பாலம் குறித்த 5 நாள் போதனைகள் நடைபெற உள்ளது.

முதல் நாள் போதனை நேற்று நடந்தது. இதில் ஸ்ரீராம சந்திரபூர் மடத்தின் மடாதிபதியான ராகவேஸ்வரா சுவாமி பேசினார். அப்போது அவர் ராமர் குறித்து பல்வேறு விஷயங்களை பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
சீதைக்காக ராமர் இரண்டாம் உலக போரை நடத்தினார். சீதையை மீட்க கடலில் பாலம் கட்டப்பட்டது. இத்தகைய அன்பு குறித்து யார் தான் கேள்வி எழுப்ப முடியும். இதை அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும். கடலில் பாலம் கட்டியவர் யார் என்றால் அது ராமர் மட்டுமே. இந்த பாலம் தான் தற்போது ராமர் பாலம் என அழைக்கப்படுகிறது.
குரு-சிஷ்யன், தந்தை - குழந்தை தாய்-குழந்தை, கணவன்-மனைவி இடையே அன்பு எனும் உயர்ந்த பாலம் இருக்க வேண்டும். இது இருந்ததால் தான் சீதையை மீட்க ராமர் பாலம் கட்டினார். கடல் தாண்டி சீதையை மீட்க வேண்டும் என்பதில் ராமர் உறுதியாக இருந்தார். இதற்காக பாலம் கட்ட முடிவு செய்தார். இந்த கட்டுமானத்துக்கு அனுமன் உதவி செய்தார்.
உலக அதிசயமான தாஜ்மஹால் இறந்து போன மனைவியின் நினைவாய் ஷாஜகான் கட்டினார். இதை ஒப்பிடும்போது வாழும் மனைவிக்காக ராமர் கட்டிய பாலம் தான் சிறந்தது என நான் கருதுகிறேன்'' என கூறினார்.
-
அவ்வளவு தூரம் சொன்ன டெல்லி மேலிடம்.. "முடியவே முடியாது.." திட்டவட்டமாக மறுத்த சித்தராமையா.. ட்விஸ்ட் -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications