Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடிகை ரோஜா ஆபாச பட நாயகியா? பண்டாருவை மன்னிக்கவே கூடாது! பொங்கி எழுந்த ரம்யா கிருஷ்ணன்

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: பெண்ணை கேவலமாக பேசுவோரை மன்னிக்கவே கூடாது என நடிகை ரோஜா விவகாரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஆதரவு குரல் கொடுத்துள்ளார்.

நடிகை ரோஜா ஆபாச படத்தில் நடித்தவர் என தெலுங்கு சேதம் கட்சியின் நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான பண்டாரு சத்யநாராயண ராவ் விமர்சித்துள்ளார்.

Ramya Krishnan gives supports to Actress Roja in Bandaru comment

நடிகை ரோஜா நடித்ததாக கூறி ஒரு வீடியோவையும் சட்டசபையில் பண்டாரு காட்டியுள்ளார். இதற்கு பெண் அமைப்புகளும் சமூக ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் நடிகை ரோஜாவும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு பேட்டி கொடுத்திருந்தார்.

அந்த பேட்டியில் நான் ஆபாச படத்தில் நடித்தவள் என்கிறார்கள். ஒரு வீடியோவையும் சட்டசபையில் காட்டினார்கள். ஆனால் அதில் நடித்தது நான்தான் என்பதற்கான எந்த ஆதாரத்தையும் அவர்கள் காண்பிக்கவில்லை. பண்டாரு அவர் வீட்டு பெண்களை இப்படி கேவலப்படுத்தினால் சும்மா இருப்பாரா? அவர் கூறியதை நர லோகேஷும் சந்திரபாபு நாயுடுவும் கண்டிக்கவே இல்லை.

வெட்கமே இல்லாமல் பண்டாரு கூறிய கருத்துகளுக்கு அவருக்கு ஆதரவாக கமென்ட் போடுகிறார் லோகேஷ். இப்படி செய்தால் பெண்கள் எப்படி அரசியலுக்கு வருவார்கள்? இதையெல்லாம் யோசிக்கவே மாட்டீர்களா, நான் தவறானவள் என்றால் என்னை ஏன் உங்கள் கட்சியில் சேர்த்தீர்கள், பிரச்சாரம் செய்ய வைத்தீர்கள் என கேட்டு ரோஜா அந்த பிரஸ்மீட்டில் கண்ணீர் விட்டே கதறினார். அப்படியிருக்க பெண்ணுக்கு பெண்ணே எதிரி என்பதை போல் தெலுங்கு தேசம் கட்சியின் மகளிரணி தலைவி அனிதாவே இது டிரைலர்தான் ரோஜாவின் முழு ஆபாச படத்தை விரைவில் வெளியிடுவோம் என கூறியுள்ளார்.

இந்த கருத்துக்கு நடிகை ரோஜாவுக்கு ஆதரவாக குரல்கள் வந்து கொண்டிருக்கின்றன. முதலில் நடிகை ராதிகா குரல் கொடுத்தார். தற்போது இதுகுறித்து நடிகை ரம்யா கிருஷ்ணன் கூறியுள்ளதாவது: முன்னாள் அமைச்சர் பண்டாரு சத்யநாராயணன் ரோஜா குறித்து பேசியது கண்டிக்கத்தக்கது. ரோஜாவை பற்றி இப்படி வரும் விமர்சனத்தை ஒரு தோழியாகவும் ஒரு பெண்ணாகவும் என்னை மிகவும் காயப்படுத்தியுள்ளது.

Ramya Krishnan gives supports to Actress Roja in Bandaru comment

உலக பொருளாதாரத்தில் இந்தியா 5ஆவது இடத்தில் இருக்கிறது. இந்த நிலையில் நமது நாட்டில் பெண்ணியம் இப்படித்தான் பிரதிபலிக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த நாட்டின் பெண்களால் எவ்வளவுதான் தாங்க முடியும். பாலியல் வன்கொடுமை, பெண் சிசுக் கொலை என பல பிரச்சினைகளை அனுபவிக்கிறோம்.

பண்டாருவின் மோசமான விமர்சனம் ரோஜாவை மட்டுமல்லாமல் அவருடைய குடும்பத்தையும் குறி வைத்தது போல் உள்ளது. இதை பொறுத்துக் கொள்ள முடியாது. பெண்களுக்கு எதிராக வன்முறைகளுக்கு பெண்களும் ஆண்களும் இணைந்து குரல் கொடுக்க வேண்டும். எனவே பண்டாரு விவகாரத்தில் பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு பெண்ணை இப்படி கீழ்த்தரமாக பேசியவரை ஒரு போதும் மன்னிக்கவே கூடாது என ரம்யா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+