நண்பரின் மனைவியை பலாத்காரம் செய்த வழக்கு: மத்திய அமைச்சருக்கு சம்மன்- மோடி அரசுக்கு புது சிக்கல்
டெல்லி: நண்பரின் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் மத்திய இணை அமைச்சர் நிகல் சந்த்துக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
ஹரியானா மாநிலத்தின் சிர்சா மாவட்டம் அபுப்சேர் என்ற பகுதியை சேர்ந்த பெண்மணிக்கும் அம்மாநிலத்தின் ஹனுமான்கர் மாவட்டத்தை சேர்ந்த ஓம்பிரகாஷ் என்பவருக்கும் 2010, டிசம்பர் 20ம்தேதி திருமணமாகியிருந்தது.

திருமணத்துக்கு பிறகு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு தம்பதிகள் இடம் பெயர்ந்தனர். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் நகரின் வெவ்வேறு பகுதிகளில் வீடு வாடகைக்கு அமர்த்தி வசித்துவந்துள்ளனர். இந்நிலையில் ஓம்பிரகாஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து சொந்த மனைவியையே பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து 2011ல் அப்பெண்மணி போலீசில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், நான் தங்கியிருந்த வீட்டுக்கு வந்த கணவன், ஓம்பிரகாஷ், எனக்கு உணவில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து தன்னை நண்பர்களுக்கு விருந்தாக்கினார். இதை அவரே எனக்கு, தெரிவித்தார். அரசியல் மற்றும் வணிகத்தில் முன்னேற வேண்டும் என்பதற்காக இவ்வாறு நண்பர்களுக்கு என்னை விருந்தாக்கியதாக தெரிவித்தார் என்று கூறியிருந்தார். இந்த புகாரில் நிகல்சந்த் உட்பட 17 பேரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.

2011ல் பதிவான இந்த புகாரை மேற்கொண்டு விசாரிக்காமல் 2012ல் போலீசார் வழக்கை முடித்துவிட்டனர். இதை எதிர்த்து அப்பெண் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கோர்ட் மூலம் விசாரணை நடந்து வருகிறது. இவ்வழக்கில் தொடர்புள்ள நிகல்சந்த் உட்பட 17 பேருக்கும் ஜெய்ப்பூர் கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது. ராஜஸ்தானில் இருந்து மத்திய அமைச்சரவையில் இடம்பெற்ற ஒரே நபர் நிகல்சந்த்தான். மத்திய உரத்துறை இணை அமைச்சராக அவர் பதவி வகித்து வருகிறார். இவரது மீதான வழக்கு காரணமாக அந்த பதவியும் பறிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
மத்திய பாதுகாப்பு துறை இணை அமைச்சர் வி.கே.சிங், இந்திய ராணுவ தளபதியாக பொறுப்பேற்க உள்ள தல்பிர் சிங் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் கருத்து வெளியிட்டிருந்தார். மேலும், வி.கே.சிங்கின் நடவடிக்கையொன்றுக்கு எதிராக மத்திய அரசு நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது. இதனால் வி.கே.சிங்கை பதவி நீக்கம் செய்ய காங்கிரஸ் வலியுறுத்திவருகிறது. இந்நிலையில் மற்றொரு இணை அமைச்சர் பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கியுள்ளது மோடி அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. கிரிமினல்களுக்கு நாடாளுமன்றத்தில் இடமில்லை என்று முழங்கிய மோடியிடம், கிரிமினல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களுக்கு அமைச்சரவையில் எப்படி இடம் கொடுக்கலாம் என்று எதிர்க்கட்சிகள் கேள்விகேட்க ஆரம்பித்துள்ளன.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications