பாஜக விதியை பின்பற்றுவதை விட சமூகநீதிக்காக உயிரை விடுவேன்.. தண்டனைக்குப் பின் லாலு டிவிட்!

பாஜக விதியை பின்பற்றுவதைவிட சமூக நீதிக்காக உயிரை விடுவேன் என லாலு பிரசாத் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

ராஞ்சி: பாஜக விதியை பின்பற்றுவதைவிட சமூக நீதிக்காக உயிரை விடுவேன் என லாலு பிரசாத் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்துக்கு ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனையும் 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது.

Rather than practising BJP’s Simple Rule I will die: Lalu prasad

22 ஆண்டுகளாக நடந்துவந்த இந்த வழக்கில் சிபிஐ நீதிமன்றம் கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி லாலு குற்றவாளி என தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் ஜனவரி 3ஆம் தேதி தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்திருந்தது.

ஆனால் கடந்த மூன்று நாட்களாக பல்வேறு காரணங்களுக்காக தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று தண்டனை விவரத்தை நீதிமன்றம் அறிவித்தது.

தண்டனை அறிவிப்புக்குப் பிறகு லாலு பிரசாத் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் எங்களை பின்பற்றுங்கள் இல்லை உங்களை முடித்து விடுவோம் என்ற பாஜகவின் விதியை பின்பற்றுவதை விட சமூக நீதி, அமைதி மற்றும் சமநிலையை நிலைநாட்டுவதற்காக உயிரை விடுவேன் என தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+