செம்மரம் வெட்டியதாக 126 தமிழர்கள் கைது.. ஆந்திர சிறையில் அடைப்பு
செம்மரம் வெட்டியதாக இரண்டு நாட்களில் 126 தமிழர்கள் கைது செய்யப்பட்டு ஆந்திர சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கடப்பா: செம்மரம் வெட்டியதாக இரண்டு நாட்களில் 126 தமிழர்கள் ஆந்திர போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் உள்ள வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்துவதாக ஆந்திரக் காவல்துறைக்கு தகவல் கிடைத்ததையடுத்து, போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, செம்மரங்கள் கடத்தி வந்த 3 வாகனங்கள் மற்றும் 24 செம்மரங்கள் ஆகியவற்றை ஆந்திர போலீசார் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த 43 பேரை நேற்று ஆந்திர போலீசார் கைது செய்தனர்.

நேற்று முதல் நாள்தான் செம்மரங்களை கடத்தியதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 83 பேர் ஆந்திர போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் நேற்றும் 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆக, 2 நாட்களில் 126 பேரை ஆந்திர போலீசார் கைது செய்திருப்பது தமிழ்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த 126 பேரும், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டத்தை சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவரும் மைதுகூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, 15 நாட்கள் சிறை காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே, செம்மரக்கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்ட தமிழர்களுக்கு ஜாமீன் வழங்காமல் ஆந்திர நீதிமன்றம் இழுத்தடித்து வரும் நிலையில், மீண்டும் 126 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது தமிழகத்தில கவலையை ஏற்படுத்தியுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications