ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு: அரசு வக்கீல் நீக்க உத்தரவு ரத்து! நீதிபதி பணி நீட்டிப்பு

1991-96ஆம் ஆண்டு காலத்தில் தமிழக முதல்வராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்தார் ஜெயலலிதா என்பது வழக்கு. இந்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பல ஆண்டுகாலமாக நடைபெற்று வரும் இந்த வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் அரசு வழக்கறிஞரான பவானிசிங்கை நீக்கி கர்நாடகா அரசு உத்தரவு பிறப்பித்தது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா மனுத் தாக்கல் செய்தார். மேலும் இன்றுடன் ஓய்வு பெறும் நீதிபதி பாலகிருஷ்ணாவே தொடர்ந்து வழக்கை விசாரித்து தீர்ப்பளிக்கவும் ஜெயலலிதா கோரியிருந்தார்.
இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சவுகான், பாப்டே ஆகியோர் அடங்கிய பெஞ்ச், பவானிசிங்கை நீக்கி கர்நாடகா அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். மேலும் ஓய்வு பெறும் நீதிபதி பாலகிருஷ்ணாவுக்கு பணி நீட்டிப்பு வழங்குவது குறித்து கர்நாடகா அரசு பரிசீலிக்க வேண்டும். இது தொடர்பாக கர்நாடகா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் மாநில அரசு ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
-
உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் கோவை மூத்த பெண் வழக்கறிஞர் மோகனா! யார் இவர்? -
விஜய்க்கு முதல் அக்னி பரீட்சை.. காரணம் வேற யாரும் இல்லை காங்கிரஸ் தான்.. அடுத்து என்ன? -
எல்லாம் சரிதான்! SIRல் தவறு எதுவும் இல்லை! எல்லா மனுக்களையும் மொத்தமாக தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம்












Click it and Unblock the Notifications