அடுத்த பஞ்சாயத்து... மதச்சார்பற்ற என்ற வார்த்தையை அரசியலமைப்பில் இருந்து நீக்க சிவசேனா வலியுறுத்தல்!
மும்பை: மதச்சார்பற்ற என்ற வார்த்தையை இந்திய அரசியல் அமைப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று சிவசேனா புதிய பஞ்சாயத்தை கிளப்பியுள்ளது.
குடியரசு தினத்தை முன்னிட்டு, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சகம் வெளியிட்ட விளம்பரத்தில் இடம்பெற்றுள்ள அரசியலமைப்பின் முன்னுரைப் பக்கப் படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசியலமைப்பின் முன்னுரையில் உள்ள மதச்சார்பின்மை, சோஷலிஸம் ஆகிய இரு வார்த்தைகள் விளம்பரத்தில் இடம்பெறாமல் இருந்ததே இச்சர்ச்சைக்கு காரணம்.

விளம்பரம் தொடர்பாக அரசியல் கட்சிகள் இடையே வார்த்தை போர் தொடங்கியுள்ளது. இதற்கிடையே சிவசேனா கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவுத் கூறுகையில், மத்திய அரசின் குடியரசு தினவிழா விளம்பரத்தில் வார்த்தைகள் (மதச்சார்பின்மை மற்றும் சோஷலிஸம்) விலக்கப்பட்டதை நாங்கள் வரவேற்கிறோம். கவனக்குறைவு காரணமாக இது நடைபெற்று இருக்கலாம்.
இது இந்திய மக்களின் உணர்வுகளை கவுரவிப்பது போல் உள்ளது. இம்முறை தவறுதலாக இந்த வார்த்தைகள் நீக்கப்பட்டு இருந்தாலும், இந்தவார்த்தைகள் அரசியலமைப்பில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட வேண்டும்.
மதத்தின் அடிப்படையிலே இந்தியா பிரிக்கப்பட்டுள்ளது என்று பால் தாக்கரே மற்றும் அவருக்கு முன்பாக வீர் சாவர்கர் ஆகியோர் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் இஸ்லாமியர்களுக்காக உருவாக்கப்பட்டது. இதனால் மீதம் உள்ளவை அனைத்தும் இந்துக்களின் தேசமே. சிறுபான்மை சமூகம் ஒரு அரசியல் வளர்ச்சிக்காகவே பயன்படுத்தப்படுகிறது, இப்படியிருக்கையில் இந்துக்கள் தொடர்ந்து அவமதிக்கப்பட்டு வருகின்றனர் என்றார்.
விளம்பரத்தில் இரு வார்த்தைகள் இடம்பெறாததற்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் மணிஷ் திவாரி நேற்று கடும் கண்டனம் தெரிவித்தார். ஆனால் தற்போதைய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர், விளம்பரத்தில் இடம்பெற்றுள்ள படம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் பயன்படுத்தப்பட்டது என்று விளக்கம் அளித்தார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications