திக் திக் - 37 பேர் கொலை.. ரத்தத்தில் குளித்த மேற்கு வங்கம்! இன்று 697 மையங்களில் மறுவாக்குப்பதிவு

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலின்போது ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து வாக்குப்பதிவு முறையாக நடைபெறாத 697 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 1970 ஆம் ஆண்டு முதல் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. 2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற மேற்கு வங்க ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 90% இடங்கள் மற்றும் அனைத்து மாவட்ட ஊராட்சிகளிலும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றது.

Repolling in 697 booths in West Bengal for local body elections

அதில் வென்றவர்களின் 5 ஆண்டு பதவிகாலம் நிறைவடைந்ததை அடுத்து கடந்த ஜூலை 8 ஆம் தேதி மேற்கு வங்க மாநிலத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இந்த தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ், இடதுசாரிகள், காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டன.

அம்மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்தே வன்முறை வெடித்தது. தேர்தல் பிரச்சாரங்களின்போது கட்சியினர் இடையே மோதல் சம்பவங்கள் ஏற்பட்டன. இந்த வன்முறை 12 முதல் 18 பேர் வரை கொல்லப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 8 ஆம் தேதி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. பாதுகாப்பு பணியில் 65,000 துணை ராணுவப் படையினர் ஈடுபடுத்தப்பட்டனர். மேற்கு வங்க மாநில காவல்துறை சார்பில் 70 ஆயிரம் போலீசார் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

வாக்குப்பதிவு தொடங்கிய சில மணி நேரத்திலேயே பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. கூச்பெகார் மாவட்டத்தில் வாக்குப்பெட்டிகள் தூக்கிச் சென்று உடைக்கப்பட்டனர். வாக்குச்சாவடிக்கே தீ வைக்கப்பட்டது. பல இடங்களில் துப்பாக்கிச்சூடு சம்பவங்களும் நடைபெற்றதால் மக்கள் வாக்களிக்கவே செல்லவில்லை.

கர்கிராம், ரெஜிநகர், துஃபான்கஞ்ச் ஆகிய பகுதிகளில் தங்கள் கட்சித் தொண்டர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் தெரிவித்து உள்ளது. தொம்கோல் பகுதியில் துப்பாக்கிச்சூடு சத்தங்கள் கேட்டதாகவும் அக்கட்சி கூறியது. பாஜக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சியினர் கூட்டு சேர்ந்து திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் மீது தாக்குதல் நடத்துவதாக அக்கட்சி குற்றம்சாட்டியது.

தேர்தல் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ள மத்திய படைகள் என்ன செய்கின்றன எனவும் திரிணாமூல் காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது. மக்களுக்கும் வாக்குச்சாவடிகளுக்கும் பாதுகாப்பு அளிப்பதில் மத்திய படைகள் தோல்வியடைந்துவிட்டதாகவும் அக்கட்சி தெரிவித்து இருக்கிறது.

அதேபோல், பிர்கச்சா என்ற பகுதியில் அப்துல்லா என்ற சுயேட்சை வேட்பாளரின் பூத் ஏஜெண்ட் திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர் முன்னா பிபி ஆதரவாளர்களால் கொல்லப்பட்டு உள்ளதாக கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்படி பல இடங்களில் நடைபெற்ற வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்தது. இதில் 20 பேர் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் என்று கூறப்படுகிறது.

வன்முறை சம்பவங்களால் பல இடங்களில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டன. பல வாக்குச்சாவடிகளில் கள்ள ஓட்டு போடும் வீடியோக்களும் வெளியாகின. இந்த நிலையில் இன்று வாக்குப்பதிவு நிறுத்தப்பட்ட மற்றும் கள்ள ஓட்டு போடப்பட்ட 697 வாக்குச்சாவடிகளில் இன்று பலத்த பாதுகாப்புடன் மறுவாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+