கொட்டும் மழைக்கு நடுவே.. முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி! கண்களை கவரும் டிரோன் நிகழ்ச்சி
சினாப்: தலைநகர் டெல்லியில் கொட்டும் மழைக்கு நடுவே முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
டெல்லி: ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினவிழாவில் பங்கேற்ற முப்படை வீரர்கள் குடியரசு தின விழாவுக்குப் பின் பாசறைக்குத் திரும்புவார்கள். கொட்டும் மழைக்கு மத்தியில் இந்த நிகழ்ச்சி இப்போது டெல்லியில் நடந்துவருகிறது
நாட்டின் குடியரசு தின விழா கொண்டாட்டம் கடந்த ஜன. 26ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றினார்.
இந்தாண்டு எகிப்து அதிபர் குடியரசு தின விழா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டிருந்தார். அதேபோல ஒவ்வொரு மாநிலங்களிலும் அந்தந்த மாநில ஆளுநர்கள் தேசியக் கொடியை ஏற்றினர்.

பாசறை திரும்புதல்
குடியரசு தின விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த குடியரசு தின விழாவுக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் முப்படைகளைச் சேர்ந்த வீரர்களும் தலைநகர் டெல்லிக்கு வந்தனர். குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் சிறப்பாக முடிந்துள்ள நிலையில், முப்படைகளும் பாசறை திரும்பும் நிகழ்ச்சி டெல்லி கடமை பாதையில் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 29 இசைக்குழுக்களின் அணிவகுப்பு நடைபெறுகிறது.

பாசறை திரும்பும் நிகழ்ச்சி என்றால் என்ன
எப்போதும் போருக்குச் சென்ற படைகள் மீண்டும் தங்கள் நாட்டிற்குத் திரும்பும் நிகழ்ச்சியே தான் பாசறை திரும்பும் என்று பொதுவாக அழைப்பார்கள். முப்படைகளின் பேண்ட் வாத்திய இசை நிகழ்ச்சியே பாசறை திரும்பும் நிகழ்ச்சியாகும். தற்போது குடியரசு தின விழாவுக்காக வீரர்கள் தங்கள் இடத்தில் இருந்து டெல்லி வந்துள்ள நிலையில், சிறப்பு நிகழ்ச்சிகளுக்குப் பின்னர் அவர்கள் முப்படைகளும் மீண்டும் பாசறை திரும்புகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இந்த பாசறை திரும்பும் நிகழ்ச்சி மிகப் பிரம்மாண்டமாக நடக்கும்.

திரண்ட பார்வையாளர்கள்
20க்கும் மேற்பட்ட இசை அணிவகுப்புடன் மிகச் சிறப்பாக இந்தாண்டு பாசறை திரும்பும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதைக் காண ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் பேர் அங்குத் திரள்வார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாகக் குறைந்த அளவிலேயே பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்தாண்டு கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ள நிலையில், பல ஆயிரம் பேர் இதைக் காண டெல்லி திரண்டுள்ளனர்.

குடியரசு தலைவர், பிரதமர் பங்கேற்பு
எப்போதும் முப்படைகளின் தலைவரான குடியரசுத் தலைவர் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் நாட்டின் குதிரைப் படை குடியரசுத் தலைவரை வரவேற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பல முக்கிய அமைச்சர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர். கொட்டும் மழைக்கு நடுவிலும் இந்த பாசறை திரும்பும் நிகழ்ச்சி கோலாகலமாக நடந்து வருகிறது.

டிரோன் நிகழ்ச்சி
குடியரசு தின விழா அதிகாரப்பூர்வமாக நிறைவடைவதையே இது குறிக்கிறது. இந்திய ராகங்களை அடிப்படையாகக் கொண்ட 12 பாடல்களை இசைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை அங்கு மக்கள் ஆர்வமாகக் கண்டு ரசித்து வருகின்றனர். மேலும், இதில் அனைவரையும் கவரும் வகையில் சுமார் 3500க்கும் மேற்பட்ட டிரோன்கள் கலந்து கொள்ளும் அட்டகாசமான ஒரு டிரோன் நிகழ்ச்சியும் நடக்க உள்ளது. இவை அத்தனையும் இந்தியாவிலேயே தயார் செய்யப்பட்ட டிரோன்கள் ஆகும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications