அப்துல் கலாம் பெயரில் ஆராய்ச்சிப் படிப்பிற்கான உதவித்தொகை: மத்திய அரசு அறிவிப்பு
டெல்லி: மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாமின் 84-வது பிறந்த தினத்தையொட்டி அவரது பெயரில் இளம் விஞ்ஞானிகளுக்கு ஆராய்ச்சி படிப்பிற்கான உதவித்தொகையை வழங்க இருப்பதாக மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக சுற்றுச் சூழல் அமைச்சக அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் போஸ்ட்- டாக்டரல் ரிசர்ச் பெலோஷிப்' என்ற பெயரிலான இந்த உதவித்தொகை, சுற்றுச்சூழல், சூழல் இயல் தொடர்பான துறைகளில் முனைவர் பட்டம் (பி.எச்.டி.) பெற்ற அல்லது பெறுகிற நிலையில் உள்ள இளம் விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படும்.
அறிவியல் மற்றும் தொழில் நுட்ப ஆராய்ச்சிகள், நாட்டு மக்களின் பாதுகாப்புக்கு சவாலாய் அமைந்துள்ள சுற்றுச் சூழல் தொடர்பான பிரச்னைகளுக்கு என்றும் தீர்வு அளிப்பதாக அமைய வேண்டும், அதன் மூலம் வருங்கால சந்ததியினரும் பயன்பெற வேண்டும் என்று கலாம் உறுதியாக நம்பினார்.
இந்த படிப்பு உதவி பெறுவதற்கான இளம் விஞ்ஞானிகளை, டாக்டர் ஆர்.ஏ.மாஷெல்கார் தலைமையிலான வல்லுனர் குழு தேர்வு செய்யும், என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications