மாநிலங்களின் ஒப்புதலுடன் நதிகள் இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும் - உமா பாரதி உறுதி
டெல்லி: மாநிலங்களின் ஒப்புதலுடன் நதிகள் இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என்று மக்களவையில் நீர் ஆதாரத் துறை அமைச்சர் உமா பாரதி உறுதி அளித்தார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 18 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்களவையில் நேற்றைய கூட்டத்தின் போது நதிகள் இணைப்பு திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அதிமுக எம்.பி.க்கள் பேசினர்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள எம்.பி.க்கள் அவையில் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் கேள்வி நேரத்தின் போது அமைச்சர் உமா பாரதி பேசியதாவது: நதிகள் இணைப்பு திட்டத்துக்கு தமிழ்நாடு ஆதரவு அளிக்கிறது. இத்திட்டத்தை செயல்படுத்த எப்பொழுதும் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது.
ஆனால், கேரளா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. எனவே, ஒப்புதல் அளிக்கும் மாநிலங்களுடன் மட்டும்தான் நதிகள் இணைப்பு குறித்து பேசுவோம். இதை பிரதமர் மோடியும் தெளிவாக கூறியுள்ளார். இத்திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க எந்த மாநிலத்தையும் கட்டாயப்படுத்த மாட்டோம். தாங்களாக முன்வரும் வரை காத்திருப்போம்.
எனினும் நதிகள் இணைப்பு திட்டத்தை நிறைவேற்றுவோம். இந்த திட்டம் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ள திட்டமாகும். இதை பாஜக தேர்தல் அறிக்கையிலும் குறிப்பிட்டுள்ளோம். உச்ச நீதிமன்றம் கூட நாட்டின் நலன் கருதி நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்தலாம் என்று கூறியுள்ளது.
நாட்டில் ஒரு பக்கம் வெள்ளத்தால் ஏராளான உடைமைகளையும் உயிர்களையும் இழக்கிறோம். வெள்ளத்தை சமாளிக்க மட்டும் ஆண்டுதோறும் ரூ.5000 கோடியை மத்திய அரசு செலவு செய்கிறது. இந்த பிரச்சனைக்கு நதிகள் இணைப்பு ஒன்றுதான் தீர்வாகும். சில மாநிலங்கள் வெள்ளத்தில் தத்தளிக்க சில மாநிலங்கள் வறட்சயால் காய்ந்து கிடக்கின்றன. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண, பாஜக அரசு நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்தி காட்டும். இவ்வாறு அமைச்சர் உமா பாரதி கூறினார்.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications