சிறைக்குப் போனார் லாலு! பாஜகவில் ஐக்கியமானது ம.பி.ராஷ்டிரிய ஜனதா தளம்!

Subscribe to Oneindia Tamil

போபால்: தீவன ஊழல் வழக்கில் மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும், பீகார் மாநில முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் சிறைக்குப் போனதால் மத்திய பிரதேச மாநில ராஷ்டிரிய ஜனதா தளம் பாரதிய ஜனதாவுடன் இணைந்துவிட்டது.

தீவன ஊழல் வழக்கில் லாலுவை குற்றவாளி என ராஞ்சி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத்தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவருக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் மத்திய பிரதேச மாநில ராஷ்டிரிய ஜனதாதள கட்சி பா.ஜனதாவுடன் இணைந்துள்ளது. மாநில ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் சஞ்சய் பாபுலால் சிலாவத் மற்றும் முன்னணி தலைவர்கள் மத்திய பிரதேச பாரதிய ஜனதா கட்சித் தலைவர் நரேந்திர சிங் டோமரை சந்தித்து தங்களை அக்கட்சியில் இணைத்துக்கொண்டனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த சஞ்சய் பாபுலால் சிலாவத், ஒவ்வொரு தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்க வேண்டும் என்று லாலு பிரசாத் யாதவ் கூறிவந்தார். எங்களுக்கு கட்சியில் எந்த சுதந்திரமும் இல்லை. மத்திய பிரதேச மாநிலத்தில் கட்சியை வலுப்படுத்தவும் முடியவில்லை. கடந்த 15 ஆண்டுகாலமாக பொறுத்துப் பார்த்துவிட்டோம். அதனாலேயே பாரதிய ஜனதாவில் இணைய முடிவெடுத்தோம் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+