பச்சோரி மீதான பாலியல் புகார் உண்மைதான்... டெல்லி போலீஸ் குற்றப்பத்திரிகை
டெல்லி: தேரி அமைப்பின் துணை தலைவர் ஆர்.கே. பச்சோரி மீதான பாலியல் வழக்கில் 500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை டெல்லி போலீசார் தாக்கல் செய்ய உள்ளனர்.
ஐ.நா. பருவநிலை மாற்ற குழுவின்(ஐபிசிசி) தலைவராக இருந்தவர் ஆர்.கே. பச்சோரி(75). அவர் எரிசக்தி மற்றும் வளங்கள் நிறுவன(டிஇஆர்ஐ) தலைவராகவும் இருந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 29 வயது பெண் ஒருவர் பச்சோரி மீது டெல்லி போலீசில் பாலியல் புகார் அளித்தார்.
தான் தேரி அமைப்பில் 2013ம் ஆண்டு சேர்ந்ததில் இருந்து பச்சோரி தனக்கு பாலியல் தொல்லை அளித்தார், எஸ்.எம்.எஸ்., வாட்ஸ்ஆப் மூலம் ஆபாசமாக மெசேஜ் அனுப்பினார் என்று தனது புகாரில் அந்த பெண் தெரிவித்திருந்தார். இதையடுத்து போலீசார் பச்சோரி மீது பாலியல் தொல்லை அளித்ததாக வழக்குப்பதிவு செய்தனர்.

பதவி விலகல்
பாலியல் வழக்கில் முன்ஜாமீன் பெற்ற பச்சோரி ஐபிசிசி தலைவர் மற்றும் தேரி அமைப்பின் தலைவர் பதவிகளில் இருந்து விலகினார். இந்நிலையில் அண்மையில் தேரி அமைப்பில் துணை தலைவர் பதவி ஒன்றை உருவாக்கினர். அந்த பதவி பச்சோரிக்கு அளிக்கப்பட்டுள்ளது.

குற்றப்பத்திரிக்கை
பச்சோரி மீதான பாலியல் தொல்லை வழக்கில் 500 பக்க குற்றப்பத்திரிக்கையை டெல்லி போலீசார் தயார் செய்துள்ளனர். அவர் தேரி அமைப்பின் தலைவராக இருக்கையில் அந்த பதவியை தவறாக பயன்படுத்தியதற்கான போதிய ஆதாரங்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளது.

பச்சோரி
2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் 2015ம் ஆண்டு மார்ச் மாதம் வரை பச்சோரி அந்த பெண்ணை 34 முறை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். மேலும் அவர் 2013ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை அந்த பெண்ணுக்கு 6 ஆயிரம் எஸ்.எம்.எஸ்.கள் மற்றும் வாட்ஸ்ஆப் மெசேஜ்கள் அனுப்பி வைத்துள்ளார் என்று குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கண்ட இடத்தில்
நான் தேரியில் பணியாற்றியபோது பச்சோரி என்னிடம் அசிங்கமாக பேசியதுடன், கண்ட இடத்தில் என்னை தொட்டார், கட்டுப்பிடித்து முத்தம் கொடுத்தார். எனக்கு நேர்ந்த கொடுமை போன்று உலகில் வேறு எந்த பெண்ணுக்கும் நடக்கக் கூடாது என்று பச்சோரி மீது புகார் அளித்த பெண் தெரிவித்துள்ளார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications