"கரன்சி” புரளும் நாசிக்கில் 2 ஆயிரம் கிலோ “வெங்காயம்” அபேஸ் - விலை உயர்வால் அதிகரிக்கும் கொள்ளை!
மும்பை: நாசிக்கில் 2 ஆயிரம் கிலோ வெங்காயம் திருடு போன சம்பவம் அனைவரையும் பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது.
வட மாநிலங்களில் வெங்காயம் விலை இறக்கை கட்டி பறக்கிறது. சில்லறை விலையில் கிலோ ரூபாய் 80 யை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் மராட்டிய தலைநகர் மும்பை வடாலாவில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வியாபாரி ஒருவரின் கடை பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் 700 கிலோ வெங்காயத்தை திருடி சென்று விட்டனர்.

இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை போலீசார் துப்பு துலக்க முடியாமல் திணறி வரும் நிலையில், அதே மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் வெங்காய திருட்டு சம்பவம் அரங்கேறி உள்ளது.
அந்த மாவட்டத்தில் உள்ள நந்த்காவ் தாலுகா பிம்பர்கேத் கிராமத்தை சேர்ந்த விவசாயி அபாசாகேப் பவார். இவர் தனது விவசாய நிலத்தில் விளைந்த வெங்காயத்தை குடோனில் வைத்து இருந்தார். சம்பவத்தன்று இரவு குடோனின் கதவு பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் 2 ஆயிரம் கிலோ வெங்காயத்தை திருடி சென்று விட்டனர்.
நல்ல விலைக்கு விற்க நினைத்து குடோனில் சேமித்து வைத்திருந்த வெங்காயம் திருட்டு போனதால் அதிர்ச்சி அடைந்த விவசாயி, நந்த்காவ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்காய திருட்டு ஆசாமிகளை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications