போலீஸ் என ஏமாற்றி வீடு புகுந்து 3 பெண்கள் கூட்டு பலாத்காரம்! டெல்லி அருகே அதிர்ச்சி சம்பவம்
டெல்லி: போலீஸ்காரர்கள் என ஏமாற்றி வீடு புகுந்து 3 பேர்களை அடுத்தடுத்து பலாத்காரம் செய்த கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா மாவட்டத்தில் உள்ள கரோலி கிராமத்தில் செங்கல் சூலை தொழிலாளர்கள் வசித்து வந்த பகுதிக்குள் நேற்று நள்ளிரவுக்கு பிறகு ஒரு கொள்ளை கும்பல் புகுந்தது.

அங்குள்ள வீடுகளுக்குள் புகுந்த கும்பல் தூங்கிக்கொண்டிருந்த 3 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். பின்னர் கிடைத்த பொருட்களை கொள்ளையடித்து கொண்டு தப்பி ஓடி விட்டனர்.
இது குறித்து கிரேட்டர் நொய்டா போலீஸ் எஸ்.பி. சுஜாதா சிங் கூறியதாவது: சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து உள்ளோம். பாதிக்கபட்ட பெண்கள் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைக்கபட்டு உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. என்றார்.
பாதிக்கப்பட்ட பெண் ஒருவரின் கணவர் கூறுகையில், "நள்ளிரவு 12.30 மணியளவில் ஏழெட்டு ஆண்கள் வந்து வீட்டு கதவை தட்டினர். யார் என்று கேட்டபோது, போலீசார் என்று கூறினர். விசாரணை நடத்த வேண்டியிருப்பதாகவும் அவர்கள் கூறினர். இதை நம்பி கதவை திறந்தேன். அப்போது அந்த கும்பல் ஆயுதங்களை காட்டி மிரட்டி வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தது.
வீட்டுக்குள் நுழைந்த கும்பலை சேர்ந்தவர்கள், என்னை மிரட்டிவிட்டு, மனைவியை ஒருவர் பின் ஒருவராக பலாத்காரம் செய்தனர். பிறகு பக்கத்து வீடுகளில் 2 பெண்களையும் இதேபோல அடுத்தடுத்து பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோடினர்" என்று கூறியுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications