For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கல்லை வீசி ரயிலை நிறுத்தி பயணிகளிடம் பணம், நகை கொள்ளை.. டெல்லி-கோவை ரயிலில் துணிகரம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

போபால்: டெல்லி-கோவை இடையே இயங்கும், கொங்கு எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகளிடம் கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது.

நேற்று முன்தினம் டெல்லியில் இருந்து கோவை நோக்கி வந்து கொண்டிருந்தது கொங்கு எக்ஸ்பிரஸ் ரயில். நள்ளிரவு நேரத்தில், மத்திய பிரதேச மாநிலம் இடார்சி சந்திப்பு அருகே போலா பத்தார் ரயில் நிலையத்தை நெருங்கியபோது, அடர்ந்த வனப்பகுதியில் மறைந்திருந்த ஒரு கொள்ளை கும்பல், ரயில் மீது சரமாரியாக கற்களை வீசியது. சட..சட என சத்தம் கேட்டதால், ரயில் இன்ஜின் டிரைவர், ரயிலின் வேகத்தை குறைத்து நிறுத்தியுள்ளார்.

Robbers loot passengers after forcing train to halt in MP

இதை பயன்படுத்திய அந்த கும்பல், ரெயிலில் தாவி ஏறியது. பின்னர், ரயிலில், தூங்கும் வசதி கொண்ட இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் பயணித்த பயணிகளிடம் நகை, பணத்தை தருமாறு மிரட்டி தங்க நகைகள், செல்போன்கள், ரொக்கப்பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அந்த கும்பல் இருட்டில் தப்பி ஓடிவிட்டது.

அதிகாலை 2 மணியளவில், ரயில், பெடுல் ரெயில் நிலையத்தை அடைந்தபோது, அங்கு இந்த கொள்ளை சம்பவம் பற்றி பயணிகள் புகார் தெரிவித்தனர். இதுபற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

English summary
A group of unidentified persons looted passengers of New Delhi-Coimbatore Kongu Express after forcing the train to halt by throwing stones in a forested area near the Itarsi junction on Sep.23 night.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X