நேரடி அரசியலுக்கு வருகிறாரா பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா? அவரே சொன்ன தகவல்
லக்னோ: அமேதி தொகுதியில் தற்போது எம்பியாக இருக்கும் ஸ்மிரிதி இரானி செயல்பாடு காரணமாக மக்கள் அதிருப்தியில் இருப்பதாகவும், காந்தி குடும்பத்தை சேர்ந்தவர் மீண்டும் எம்பியாக வர வேண்டும் என அவர்கள் விரும்புகிறர்கள் என்றும் ராபர்ட் வதேரா கூறியுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் அமேதி, ரேபரேலி தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக விளங்கியது. இந்திரா காந்தி காலம் தொடங்கி ராகுல் காந்தி காலம் வரை அங்கு காங்கிரஸ் கட்சி பெரும் வெற்றி பெற்றது. அமேதி தொகுதியில் 2004, 2009 மற்றும் 2014 ஆகிய தேர்தல்களில் ராகுல் காந்தி வெற்றி பெர்றார்.

ஆனால் கடந்த 2019 தேர்தலில் அவர் பாஜகவின் ஸ்மிருதி இரானியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். எனினும் கேரளாவின் வயநாடு தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிட்டதால் எம்பியானர். இந்த ஆண்டு அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வயநாடு தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இதனால் அமேதியில் ஸ்மிருதி இரானியை எதிர்த்து நிற்கப்போகும் வேட்பாளர் யார்? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ரேபரேலி தொகுதி எம்பியான சோனியா காந்தி, லோக்சபா தேர்தலில் போட்டியிடாமல், ராஜ்யசபா உறுப்பினராகியுள்ளார். இதனால் அவரது ரேபரேலியில் பிரியங்கா போட்டியிடுகிறார்.
இதன் காரணமாக அமேதி தொகுதியில் தற்போது காந்தி குடும்பத்தில் ஆக்டிவாக இருக்கும் யாரும் போட்டியிடுவது இல்லை என்பது உறுதியாகியுள்ளது. இந்த நிலையில், பிரியங்கா கணவரான ராபர்ட் வதேரா, அமேதி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக ராபர்ட் வதேரா கூறியிருப்பதவது:-
ரேபரேலி, சுல்தான்பூர் மற்றும் அமேதி ஆகிய தொகுதிகளில் பல ஆண்டுகளாக காந்தி குடும்பத்தினர் தீவிர மக்கள் பணியாற்றினர். ஆனால் இப்போதைய எம்பியால் மக்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர். ஸ்மிரிதி ராணியை தேர்வு செய்தது தவறு என்று அமேதி மக்கள் வருத்தம் அடைந்துள்ளனர். தொகுதியின் வளர்ச்சி பற்றி ஸ்மிரிதி ராணி சிந்திக்கவில்லை.
காந்தி குடும்பத்தினருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார். நான் அரசியலில் இறங்கினால் அமேதியை தேர்வு செய்ய வேண்டும் என்று அமேதி மக்களிடம் இருந்து எனக்கு கோரிக்கை வந்தது. எனது முதல் அரசியல் பிரச்சாரம் கூட அமேதியில் இருந்தே தொடங்கியது.
பிரியங்கா உடன் 1999-ல் அமேதியில் பிரச்சாரம் மேற்கொண்டது நன்றாக நினைவில் இருக்கிறது. நாங்கள் மேற்கொண்ட உழைப்பை மக்கள் புரிந்துகொண்டுள்ளனர். சமூக வலைத்தளங்களில் தொகுதி மக்கள் என்னுடன் தொடர்பில் உள்ளார்கள். எனது அலுவலகத்தின் வெளியே என்னை சந்திக்கிறார்கள். எனது பிறந்த நாளை கொண்டடுகிறன்றனர். இவ்வாறு அவர் கூறினார். இதன் மூலம் அவர் அமேதி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளது.
-
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு.. சிட்டிங் சீட்களில் 2-ஐ விட்டுக் கொடுத்தது காங்! -
"காங்- பாஜக கதை ஓவர்".. தொகுதி ஒதுக்கீட்டில் ஸ்டாலின்- எடப்பாடி செய்த சம்பவம்! இதை கவனிச்சீங்களா? -
Congress: விடாப்பிடியாக வாங்கிய காங்கிரஸ்.. திமுக கூட்டணியில் போட்டியிடும் 28 தொகுதிகள் எவை? லிஸ்ட் வெளியானது -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
அறிவாலயம் vs சத்தியமூர்த்தி பவன்.. ராகுல் மீது கடும் கோபத்தில் ஸ்டாலின்.. வெடித்தது யுத்தம்? -
தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்.. டென்ஷனான ராகுல் காந்தி.. கூட்டத்தில் எம்பிக்கள் வாக்குவாதம்! -
குறைந்த தொகுதிகளை வாங்கிவிட்டு அடிச்சிக்கிறாங்க.. தமிழக காங். நிர்வாகிகளை விமர்சித்த பிரவீன் சக்கரவர்த்தி -
காங்கிரஸ் கை வசம் வந்த ஈரோடு கிழக்கு! ஈவிகேஎஸ் இளங்கோவன் பேத்தி சமன்னா போட்டியா? -
மதுரை வடக்கு.. பிடிவாதம் காட்டிய மாணிக்கம் தாகூர்.. கண்டுகொள்ளாத திமுக! விருதுநகர் தொகுதியும் போச்சா -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம் -
கம்யூனிஸ்ட்களுக்கு நோ.. கோவையில் காங்கிரஸ்க்கு அள்ளி கொடுத்த திமுக.. உடன்பிறப்புகள் அப்செட்












Click it and Unblock the Notifications