கேரளாவின் முதல் எம்.எல்.ஏ. 100 வயது ரோசம்மா காலமானார்
திருவனந்தபுரம்: கேரளாவின் முதல் எம்.எல்.ஏ என்ற பெருமையைப் பெற்ற ரோசம்மா நேற்று காலமானார். தற்போது அவருக்கு வயது 100 ஆகும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், கேரள மாநிலத்தின் முதல் எம்.எல்.ஏ.வுமான ரோசம்மா புன்னூஸ் ஓமனில் நேற்று காலமானார். கடந்த மே மாதம் தனது 100 வது பிறந்தநாளைக் கொண்டாடிய ரோசம்மாவின் கணவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.பி.யுமான பி.டி.புன்னூஸ் பல ஆண்டுகளுக்கு முன்பே, மரணமடைந்து விட்டார்.
மறைந்த ரோசம்மாவுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். தனது இறுதி நாட்களை ஓமன் நாட்டின் சலாலா நகரில் வசித்து வந்த தன் மகனுடன் தான் கழித்தார் ரோசம்மா.

வெற்றி....
கேரள கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பெண் ஆர்வலர்களில் முன்னோடியான ரோசம்மா, கடந்த 1957-ம் ஆண்டு நடந்த முதல் சட்டமன்றத் தேர்தலில் தேவிகோலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

சட்டமன்ற உறுப்பினராக....
அப்போது பதவியேற்ற முதல் எம்.எல்.ஏ. ரோசம்மாதான். அதன்பின்னர் 1987ல் இடுக்கி தொகுதியில் இருந்தும் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

தலைவர் பதவி...
இதுதவிர, கேரள மகளிர் ஆணையம் மற்றும் ரப்பர் வாரிய உறுப்பினராகவும், பெருந்தோட்ட வாரியம் மற்றும் வீட்டு வசதி வாரியத்தின் தலைவராகவும் ரோசம்மா பணியாற்றியுள்ளார்.

இறுதிச்சடங்கு....
அன்னாரது உடல் ஓமனில் இருந்து கேரள மாநிலத்திற்கு கொண்டு வரப்படுகிறது. அதன் பின்னர் அவரது சொந்த ஊரான திருவல்லாவில் நாளை இறுதிச்சடங்குகள் நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications