ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த பயணி.. ஹீரோ போல் காப்பாற்றிய பெண் போலீஸ்.. சல்யூட் போட்ட நெட்டிசன்ஸ்
கொல்கத்தா: மேற்கு வங்காள மாநிலத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது முதியவர் ஒருவர் ரயிலுக்கும் பிளாட்பாரத்துக்கும் இடையே சிக்கிக்கொண்டார். அப்போது துரிதமாக செயல்பட்ட ஆர்பிஎப் பெண் போலீஸ் அந்த முதியவரை சரியான நேரத்தில் காப்பாற்றினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள புருலியா ரயில் நிலையத்தில் வயதான பயணி ஒருவர் ரயிலில் ஏற முயன்ற போது தடுமாறி கீழே விழுந்தார்.

ஒரு நொடி தாமதித்திருந்தால் கூட முதியவர் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருக்கும் சூழலில் கொஞ்சம் கூட தாமதிக்காமல் அங்கு பணியில் இருந்த பெண் போலீஸ் ஓடிச்சென்று காப்பாற்றிய விடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்:
இந்தியாவில் மக்களின் பயண தேவையை பெரிதும் பூர்த்தி செய்வது ரயில்கள் தான். மலிவான கட்டணம், பாதுகாப்பான பயணம் என்பதால் பயணிகள் பெருமாலும் ரயில்களில் செல்வதைத்தான் விரும்புவார்கள். இதனால், ரயில்களில் எப்போதும் கூட்டம் அலைமோதுவதை காண முடியும். சில நேரங்களில் ரயில்களில் அவ்வப்போது பயணிகள் ரயில்களில் ஏற முயன்று தவறி விழும் கட்சிகள் வெளியாகி பதை பதைக்க வைக்கும்.

ரயில் நிலையத்தில் இருக்கும் பயணிகள் மற்றும் ரயில்வே போலீசார் பயணிகளை காப்பாற்றும் நிகழ்வுகளும் சில நேரங்கள் பயணிகள் விபத்தில் சிக்கிக் கொள்ளும் சம்பவங்களும் அவ்வப்போது நடந்து கொண்டு தான் இருக்கின்றன. ஓடும் ரயிலில் ஏற முயற்சிப்பது ஆபத்தில் தான் கொண்டு போய் சேர்க்கும் என்று ரயில்வே நிர்வாகம் அவ்வப்போது அறிவுறுத்தி வந்தாலும் பயணிகள் சிலர் அதை காதில் போட்டுக்கொள்வது இல்லை.
அதேபோல் தண்டவாளங்களை கடந்து செல்வது..ரயில்கள் வரும் போது செல்ஃபி எடுக்க முயற்சிப்பது போன்ற காரணங்களாலும் சிலர் ஆபத்தில் சிக்குகின்றனர். இது குறித்த விழிப்புணர்வு அவ்வப்போது ரயில்வே நிலையத்தில் செய்யப்பட்டு வந்தாலும் இது நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது. சரி இங்கே விஷயத்திற்கு வருவோம்...

மேற்கு வங்காள மாநிலம் புருலியா ரயில் நிலையத்தில் ரயில் ஒன்று புறப்பட்டு சென்று கொண்டிருக்கிறது. ரயில் மெதுவாக புறப்பட்டு சென்று கொண்டிருந்த போது ரயிலில் ஏற முயற்சித்தார். ஆனால் கால் இடறி கீழே விழுந்தார். ரயிலுக்கும் தண்டவாளத்திற்கு இடையிலும் அவர் கால் சென்றது. பிளாட்பார்மில் பாதுகாப்புக்கு நின்றிருந்த ரயில்வே பெண் போலீஸ் ஒருவர் இதைக் கவனித்து ஓடிச்சென்று அந்த முதியவரை வெளியே இழுத்தார்.
அதற்குள் அங்கு பணியில் இருந்த பிற பயணிகளும் ஓடி வந்து முதியவரை காப்பாற்றினர். ரயில்வே பெண் போலீஸ் உரிய நேரத்தில் துரிதமாக செயல்பட்டு பயணியை காப்பாற்றியது பல தரப்பிலும் பாராட்டுக்களை பெற்று வருகிறது. இணையத்திலும் இது தொடர்பான வீடியோ அதிகம் பரவி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் அந்த பெண் போலீசை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.
यात्रियों की सुरक्षा में सदैव तत्पर @rpf_india
— Ministry of Railways (@RailMinIndia) April 26, 2023
पुरुलिया स्टेशन पर एक बुजुर्ग यात्री की जान बचाते हुए सजग आरपीएफ़ कर्मचारी। pic.twitter.com/oq7ztKVLhI












Click it and Unblock the Notifications