For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சூப்பரோ சூப்பர்.. அதிக குழந்தைகளை பெற்றால் ரூ.1 லட்சம் பரிசு.. முதல்வரின் அதிரடி.. எங்கேன்னு பாருங்க

அதிக குழந்தைகள் பெற்றால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு என மிசோரம் அறிவித்துள்ளது

Google Oneindia Tamil News

அய்ஸால்: ஒரு மாநில முதல்வர், குடும்ப கட்டுப்பாடு வேண்டும் என்று கோரிக்கையாக விடுத்த நிலையில், இன்னொரு மாநில முதல்வர், மக்கள் தொகை அதிகரிப்பதற்காக, அதிக குழந்தைகளை பெற்றவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு தொகை அறிவித்துள்ளார்.. இந்த ஆச்சரிய அறிவிப்பினை மிசோரம் மாநிலம் அறிவித்துள்ளது.

கடந்த மாதம் அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஒரு அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.. அதாவது, இந்த மக்கள்தொகைதான் நமக்கு பெரும் பிரச்சனையாக இருக்கிறது..

எனவே, சிறுபான்மை சமூகத்தினர் தங்கள் மக்கள் தொகையை கட்டுப்படுத்த முன்வர வேண்டும்.. வறுமைக்கும், கல்வியில்லாததற்கும், முறையான குடும்ப கட்டுப்பாடு இல்லாததற்கும் இந்த மக்கள்தொகை பெருக்கம்தான் காரணம்" என்று கூறியிருந்தார்.

 அஸ்ஸாம்

அஸ்ஸாம்

மத்திய மற்றும் கீழ் அஸ்ஸாமின் வங்காள மொழி பேசும் முஸ்லிம்கள் பங்களாதேஷில் இருந்து குடியேறிய முஸ்லிம்களாக கருதப்படுகிறார்கள்.. புலம்பெயர்ந்த முஸ்லிம்கள் அஸ்ஸாமின் 3.12 கோடி மக்கள்தொகையில் 31 சதவீதத்தினர் இருக்கிறார்கள்.. மேலும், 126 சட்டமன்ற இடங்களில் 35 இடங்களை தீர்மானிப்பதில் இவர்கள்தான் முக்கிய காரணியாகவும் விளங்குகிறார்கள்.

 நடவடிக்கை

நடவடிக்கை


மற்றவர்களை எல்லாம் விட்டுவிட்டு, முஸ்லிம் பெருமக்களை மக்கள்தொகை கட்டுப்படுத்தும்படி பாஜக முதல்வர் பேசிய பேச்சு பெரும் விவாதத்தை கிளப்பியது. அதுமட்டுமல்ல, 2 குழந்தைகள் மட்டும் உள்ளவர்களை ஊக்குவிக்கும் விதமாக பல நடவடிக்கைகளை இம்மாநில முதல்வர் மேற்கொண்டும் வருகிறார். ஆனால், இதற்கு நேர்மாறாக மற்றொரு வடமாநில அரசு, இன்ப அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது..

 இன்ப அதிர்ச்சி

இன்ப அதிர்ச்சி


2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மிசோரமின் மக்கள் தொகை 1,091,014 ஆகும்... சுமார் 21,087 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இந்த மாநிலம் இருக்கிறது.. அதாவது, ஒரு சதுர கிமீ பரப்புக்கு 52 நபர்கள் வசித்து வருகின்றனர். .. மிசோரம் மாநிலம் இந்த சராசரியில் அருணாசலப் பிரதேசத்துக்கு அடுத்தபடியாக குறைந்த மக்கள் பரப்பை கொண்டுள்ளது. இதனை அடுத்து, மிசோரத்தில் மக்கள் தொகை அதிகரிப்பதற்காக அங்குள்ள அமைச்சர்கள் பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.

 விளையாட்டுத்துறை

விளையாட்டுத்துறை

அந்த வகையில் அம்மாநிலத்தின் விளையாட்டுத்துறை அமைச்சர் ராபர்ட் ரோமாவியா ராய்டேவும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, தனது 2 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், அதிக எண்ணிக்கையில் குழந்தை பெற்று, தற்போது உயிருடன் உள்ள ஆண் அல்லது பெண் ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும் என்று கூறியுள்ளார்..

 பரிசு

பரிசு

அதுமட்டுமல்ல, அந்த நபருக்கு சர்ட்டிபிகேட்டும், கோப்பையும் வழங்கப்படும் என்றும், இந்த செலவை தனது மகன் நடத்தும் கட்டுமான ஆலோசனை நிறுவனம் ஏற்கும் என்றும் அதிரடியாக அறிவித்துள்ளார். தொகுதியில் அதிக குழந்தைகளை பெற்று வாழும் பெற்றோருக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று இவர் அறிவித்துள்ளது மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

English summary
Rs.1 lakh prize money announced for those who have more children, says Mizoram Minister
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X