For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நரேந்திர மோடியின் அதிரடி அறிவிப்பால்... பயனற்றதாகிறது 14 லட்சம் கோடி ரூபாய்

500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது அன அதிரடியாக அறிவித்துள்ளதால் சுமார் 14 லட்சம் கோடி ரூபாய் பயனற்றதாகிறது.

Google Oneindia Tamil News

மும்பை: பிரதமர் நரேந்திர மோடி கணக்கில் காட்டப்படாத பணத்தை வெளியில் கொண்டு வருவதற்கும் கருப்பு பணத்தை ஒழிப்பதற்கும் அதிரடியாக நள்ளிரவு முதல் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்துள்ளதால் தற்போது புழக்கத்தில் உள்ள 86 சதவீத பணம் பயனற்றதாகிறது என்றும், அதன் மதிப்பு சுமார் 14 லட்சம் கோடி ரூபாய் என்றும் ரிசர்வ் வங்கி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக இந்தியா ஸ்பென்ட்ஸ் வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பிரதமரின் இந்த அதிரடி அறிவிப்பால் கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் அதனை வங்கியில் கண்டிப்பாக வைப்புத் தொகையாக செலுத்தியாக வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. அல்லது வருகிற 24-ம் தேதிக்குள்ளாக அந்த பணத்தை மாற்றியாக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

Rs 14 Lakh Cr Cash Junked–What That Means For Black Money

ஒரு நாளைக்கு ஒரு நபர் அதிபட்சமாக 4 ரூபாய் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை மாற்றிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதாவது வருகிற 10-ம் தேதி முதல் 24-ம் தேதிக்குள் 14 நாட்களுக்குள் மாற்றிக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் வங்கிகளில் டெபாசிட் செய்ய இயலாதவர்கள் ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் அவற்றை டெபாசிட் செய்து கொள்ளலாம்.அப்போது அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதற்கான காரணத்தைக் குறிப்பிட்டு அடையாள அட்டைகளையும் சமர்பிக்க வேண்டும். இதற்கு எந்தவிதமான வரம்பும் விதிக்கப்படவில்லை.

கடந்த 2011-2016 ஆண்டு காலக்கட்டத்தில் வங்கிப் பணம் 40 சதவீதம் அதிகரித்துள்ளது. அதன்படி 500 ரூபாய் நோட்டுக்கள் 76 சதவிதமும்,1000 ரூபாய் நோட்டுக்கள் 109 சதவீதமும் அதிகரித்திருப்பதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதிய 500 ரூபாய், 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் நாளை முதல் புழக்கத்திற்கு வர உள்ளது. புதிய 500, 2000 ரூபாய் நோட்டுக்களில் எந்தவித சேதத்தையும் ஏற்படுத்த இயலாது என்று ரிசர்வ் வங்கி தகவல்கள் தெரிவிக்கின்றன.

"From midnight November 8, 2016 today, Rs 500 and Rs 1,000 notes are no longer legal tender," Prime Minister Narendra Modi announced in his address to nation. The two highest denominations of bank notes used as cash in India, Rs 500 and Rs 1,000, cannot be used for any transaction from today. The government had earlier withdrawn old Rs 500 notes from circulation, in effect, demonetizing the currency two years back, IndiaSpend reported in January 2014.

நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி நேற்று நள்ளிரவு முதல் 500 , 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அதிரடியாக அறிவித்தார்.இதற்கு முன்பாக பழைய 500 ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெறுவதாக கடந்த 2014 ஆண்டு மத்திய அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

English summary
“From midnight November 8, 2016 today, Rs 500 and Rs 1,000 notes are no longer legal tender,” Prime Minister Narendra Modi announced in his address to nation. The two highest denominations of bank notes used as cash in India, Rs 500 and Rs 1,000, cannot be used for any transaction from today. The government had earlier withdrawn old Rs 500 notes from circulation, in effect, demonetizing the currency two years back, IndiaSpend reported in January 2014.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X