தமிழகத்தில் தேர்தல் செலவு அதிகம்- சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல்

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில்தான் தேர்தல் செலவு அதிகம் என்று உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில்தான் தேர்தல் செலவுகள் அதிகம் உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நமது நாட்டில் சட்டசபை, லோக்சபா, ராஜ்யசபா தேர்தல்களில் போட்டியிடுகிற வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவுடன் சொத்து விவரத்தை தெரிவிக்கும் நடைமுறை அமலில் உள்ளது.

இந்த நடைமுறையின்படி, வேட்பாளர்கள் தங்களது அசையும், அசையா சொத்து விவரம், குடும்பத்தினரின் சொத்து விவரங்களை தெரிவிக்கின்றனர். ஆனால் அந்த சொத்துகள் எப்படி வந்தன என்பதற்கான ஆதாரத்தை தெரிவிப்பதில்லை.

இந்த ஆதாரத்தை தெரிவிக்க வேண்டும் என்பதை நடை முறைப்படுத்த வேண்டும் என கோரி உச்சநீதிமன்றத்தில் லோக் பிரஹாரி (பொது கண்காணிப்பு) என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளது.

தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, லோக்சபா தேர்தல் செலவுகள் குறித்து தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.

ரூ. 30 ஆயிரம் கோடி செலவு

ரூ. 30 ஆயிரம் கோடி செலவு

2014 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு ரூ. 30 ஆயிரம் கோடி வரை செலவாகியிருக்கலாம். தமிழகத்தில்தான் அதிகம் செலவிடப்பட்டுள்ளது. தென் மாநிலங்களில் அதிக அளவில் செலவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் செலவு

தமிழகத்தில் செலவு

தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில்தான் தேர்தல் செலவுகள் அதிகரித்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. எப்பாடுபட்டாவது வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தேர்தலில் பணத்தை வாரி இறைக்கின்றனர் வேட்பாளர்கள்.

தேர்தல் ஆணையம் செலவு

தேர்தல் ஆணையம் செலவு

லோக்சபா தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சிகள் போட்டியிட்டன. சுயேச்சை வேட்பாளர்களும் அதிக அளவில் போட்டியிட்டனர். வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது அரசின் தேர்தல் செலவும் அதிகரிக்கிறது.
வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், தேர்தல் நாளுக்கு முன் பூத் ஸ்லிப் விநியோகம், வாக்காளர்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்கும் முறை அறிமுகம் செய்தது ஆகியவை தேர்தல் செலவை மேலும் அதிகரித்துவிட்டன.

தேர்தல் செலவீனங்கள்

தேர்தல் செலவீனங்கள்

லோக்சபா தேர்தலை நடத்து வதற்கான அனைத்து செலவுகளையும் மத்திய அரசு ஏற்றுக்கொள்கிறது. ஆனால் தேர்தலையொட்டி சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் செலவை அந்தந்த மாநில அரசுகள் ஏற்றுக் கொள்கின்றன.

கோடீஸ்வர வேட்பாளர்கள்

கோடீஸ்வர வேட்பாளர்கள்

சமீப காலம் வரை அரசியல் கட்சிகள் அதிகளவு செலவு செய்து வந்தன. இப்போது அரசியல் கட்சிகளை விட வேட்பாளர்கள் அதிகமாக செலவு செய்கிறார்கள். தேர்தலில் வெற்றி பெற கோடீசுவர வேட்பாளர்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், ஒப்பந்தக்காரர்கள் பெருந்தொகை செலவு செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+