ரூ.17 லட்சம் மதிப்பிலான புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் கடத்தல்.. உடுப்பி அருகே பிடிபட்டது
கர்நாடக மாநிலம் உடுப்பியில் ரூ.17 லட்சம் மதிப்பிலான புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை காரில் கடத்திய 3 பேரை கைது செய்துள்ள போலீசார் அந்த பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.
பெங்களூரு: கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து உடுப்பிக்கு காரில் கடத்தி வரப்பட்ட ரூ.17 லட்சம் மதிப்புள்ள புதிய 2 ஆயிரம் நோட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் சம்பந்தப்பட்ட 3 பேரையும் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்த விவரம் வருமாறு: கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து 3 பேர் அடங்கிய கும்பல் காரில் ரூ.17 லட்சம் மதிப்பில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை எடுத்து வந்தனர். அவர்களை கார்களா போலீசார் வழிமறித்து விசாரித்தனர்.

அப்போது அவர்கள் சரியான பதிலை சொல்லாமல் முன்னுக்கு பின் முரணாக பேசினர். அந்தப் பணம் எப்படி அவர்களுக்கு கிடைத்தது என்பது குறித்து தெளிவு படுத்தவில்லை. எனவே, அந்த பணத்தை பறிமுதல் செய்த போலீசார் அந்த மூவரையும் கைது செய்தனர். மங்களூரைச் சேர்ந்த அந்த மூவர் இம்ரான், ஆசிப் மற்றும் தீபக் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பணம் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்தப் பணம் யாருக்கு சொந்தமானது எங்கிருந்து கொண்டுவரப்பட்டது என்பது குறித்து இனனும் சரியான தகவல் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கர்நாடக முதலமைச்சராக தேர்வாகும் டி.கே.சிவக்குமார்.. பெங்களூரில் இன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் -
அவ்வளவு தூரம் சொன்ன டெல்லி மேலிடம்.. "முடியவே முடியாது.." திட்டவட்டமாக மறுத்த சித்தராமையா.. ட்விஸ்ட் -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்!












Click it and Unblock the Notifications