கவுரி லங்கேஷுக்கு ஆர்.எஸ்.எஸ் அஞ்சலி செலுத்துகிறதாம்... போபால் செல்கிறார் மோகன் பகவத்!
சில நாட்களுக்கு முன் படுகொலை செய்யப்பட்ட கவுரி லங்கேஷுக்கு அஞ்சலி செலுத்த ஆர்.எஸ்.எஸ் இயக்கம் முடிவு செய்துள்ளது.
போபால்: கர்நாடகாவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் சில நாட்களுக்கு முன் படுகொலை செய்யப்பட்டார். அவரது மரணம் குறித்து எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்காமல் பாஜக கட்சியினரும், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினரும் அமைதி காத்து வந்தனர்.
இதையடுத்து நடிகர் பிரகாஷ் ராஜ் , பிரதமர் மோடியை சிறந்த நடிகர் என்று கூறி அனைத்து விருதுகளையும் அவருக்கே கொடுத்துவிடலாம் என்று பேசியிருந்தார். இதற்கு ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் இருந்து பலர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் கொலை செய்யப்பட கவுரி லங்கேஷுக்கு அஞ்சலி செலுத்த ஆர்.எஸ்.எஸ் இயக்கம் முடிவு செய்துள்ளது.

மோடி குறித்து எழுதிய கவுரி
கர்நாடகாவில் ''லங்கேஷ் பத்திரிக்கா" என்ற பெயரில் பத்திரிக்கை நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார் பிரபல பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ். தனது பத்திரிக்கையில் வலது சாரிகள் குறித்தும், ஆர்.எஸ்.எஸ், பாஜக குறித்தும் அடிக்கடி கட்டுரைகள் எழுதி வந்தார். இவர் மோடி பற்றி எழுதி வந்த கட்டுரைகள் அனைத்தும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இவரது கருத்துக்கள் எப்போதுமே ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தங்களுக்கு எதிராகவே இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

கவுரி சுட்டுக் கொலை
இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கவுரி லங்கேஷ் மர்ம நபர்களால் நடு சாலையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரைக் கொன்றவர்கள் யார் என்று கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் இன்னும் திணறி வருகின்றனர். இவரைக் கொன்றவர்களை கண்டுபிடிக்க கூறி பல அமைப்புகளும், எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். இவரைக் கொன்றது வலதுசாரி அமைப்புகள் தான் என பரவலாக பேசப்பட்டது.

வலதுசாரி இயக்கங்களின் மீதான சந்தேகம்
இவரது கொலை இந்தியா முழுக்க பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பலரும் இந்தக் கொலையைப் பற்றி கருத்து தெரிவிக்க ஆரம்பித்தனர். இவர் தனது பத்திரிக்கையில் எப்போதும் ஆர்.எஸ்.எஸ் இயக்கங்களுக்கு எதிராகவே எழுதி வந்ததால் அவர்களால் இவர் கொல்லபப்ட்டிருக்கலாம் என்ற கருத்து பரவலாக பரப்பப்பட்டது. அதுமட்டும் இல்லாமல் இவரது கொலைக்கும் எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் இவர்கள் அமைதியாக இருந்து பெரும் அளவில் பிரச்சனைகளை உருவாக்கியது.

அஞ்சலி கோட்டம் நடத்தும் ஆர்.எஸ்.எஸ்
இந்தநிலையில் தற்போது கொலை செய்யப்பட்ட கவுரி லங்கேஷுக்கு அஞ்சலி செலுத்த ஆர்.எஸ்.எஸ் இயக்கம் முடிவு செய்த்துள்ளது. போபாலில் இன்று நடக்க இருக்கும் ஆர்.எஸ்.எஸ் தீபாவளி மாநாட்டில் இதற்கான நிகழ்வுகள் நடக்க இருக்கின்றனர். அதே போல் இந்த வருடத்தில் இறந்த மேலும் சில நபர்களுக்கும் இதில் அஞ்சலி செலுத்தப்படும். இதில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்து கொள்ள இருக்கிறார். மேலும் இதில் மாட்டிறைச்சி காரணமாக நடந்த கொலைகள், ரோஹிங்கியா முஸ்லீம் பிரச்சனை ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட இருக்கிறது.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications