நாக்பூர் கோட்டையில் ஆர்.எஸ்.எஸ். பிரம்மாண்ட அணிவகுப்பு.. சிறப்பு விருந்தினர் எந்த பிரபலம் தெரியுமா?
நாக்பூர்: விஜயதசமியை முன்னிட்டு மத்தியில் ஆளும் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கம், மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் பிரம்மாண்டமான அணிவகுப்பை இன்று நடத்தியது.
1925-ம் ஆண்டு விஜயதசமி நாளில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தொடங்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தை ஹெட்கேவர் தொடங்கி வைத்தார். இந்த இயக்கத்தின் அரசியல் பிரிவான ஜன சங்கம் செயல்பட்டு பின்னர் பாரதிய ஜனதாவாக உருவெடுத்தது. மகாத்மா காந்தி படுகொலை உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை தொடர்புபடுத்தி விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆர்.எஸ்.எஸ். இயக்கம் மீது தடை விதிக்கப்பட்டும் பின்னர் விலக்கிக் கொள்ளப்பட்டும் இருக்கின்றன.

ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தொடங்கப்பட்ட விஜயதசமி நாளில் நாடு முழுவதும் மாநிலங்களில் பிரம்மாண்ட ஊர்வலங்கள் நடத்தப்படும். தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் பெரும் கட்டுப்பாடுகளுடன் நீதிமன்ற தலையீட்டுடன் நடத்தப்படுகிறது. கேரளாவில் கோவில் வளாகங்களில் ஆர்.எஸ்.எஸ்.இயக்க பயிற்சி, அணிவகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் தலைமையகம் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் விஜயதசமி நாளில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் நாக்பூரில் பிரம்மாண்ட அணிவகுப்பு நடத்தும். இந்த ஆண்டும் அந்த இயக்கத்தின் சீருடையில் தலைவர் மோகன் பகவத் முதல் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் பெருந்திரளாக பங்கேற்று அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர். நாக்பூர் சிபி- பெரர் கல்லூரி சாலையில் தொடங்கிய அணிவகுப்பு ஊர்வலம், ரெசிம்பார்க் மைதானம் வரை நடைபெற்றது. ரெசிம்பார்க் மைதானத்தில் விஜயதசமி பூஜைகள் நடைபெற்றது. ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் ஹெட்கேவருக்கு அந்த இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் மரியாதை செலுத்தினார்.
இந்த ஆண்டு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் விஜயதசமி அணிவகுப்பு ஊர்வல நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக திரை உலக பிரபலம், சங்கர் மகாதேவன் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பேசிய சங்கர் மகாதேவன், ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் அணிவகுப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக- தலைமை விருந்தினராக பங்கேற்பது பெருமிதமான தருணம். இதற்காக ஆர்.எஸ்.எஸ். குடும்பத்துக்கு நன்றி செலுத்துகிறேன் என்றார். நாக்பூர் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
#WATCH | RSS holds annual Vijaydashmi Utsav in Nagpur, Maharashtra. pic.twitter.com/oDci1JUSnI
— ANI (@ANI) October 24, 2023
-
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications