கர்நாடகாவில் போற போக்கைப் பார்த்தா பாஜக நிலைமை படுமோசம்.. அமித்ஷாவுக்கு ஆர்.எஸ்.எஸ். கதறல் கடிதம்
கர்நாடகா நிலவரம் குறித்து பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கம் கடிதம் அனுப்பியுள்ளது.
Recommended Video

பெங்களூர்: கர்நாடகா மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறும் நிலையில் உட்கட்சி வெட்டு குத்தால் பாரதிய ஜனதா கட்சி மோசமான சூழ்நிலையை எதிர்கொள்ளப் போகிறது என அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கம் கடிதம் அனுப்பியுள்ளது.
கர்நாடகா சட்டசபைக்கான தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தற்போதைய முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சியைத் தக்க வைக்கும் வியூகங்களை வகுத்து செயல்பட்டு வருகிறது. பாரதிய ஜனதா கட்சியும் இழந்த ஆட்சியை மீண்டும் பெறுவதற்கு முனைப்பு காட்டி வருகிறது.
ஆனால் மற்ற மாநிலங்களைப் போல அல்லாமல் இங்கு மாநில காங்கிரஸ், பாஜகவை மிரள வைத்துக் கொண்டிருக்கிறது. அத்துடன் பாஜகவுக்குள்ளே நடந்து கொண்டிருக்கும் உட்கட்சி மோதல்களால் பெரும் களேபரத்தில்தான் இருக்கிறது அக்கட்சி.

வெற்று நாற்காலிகளை பார்த்து
அண்மையில் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, கர்நாடகாவில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போது வெற்று நாற்காலிகளைப் பார்த்து பேச வேண்டிய அளவுக்கு நிலைமை படுமோசமாகவே இருக்கிறது. இந்த நிலையில் உட்கட்சி மோதல் தொடர்ந்து நீடித்தால் வரும் சட்டசபை தேர்தலில் கேவலமான நிலைதான் வரும் என களநிலவரத்தை அமித்ஷாவுக்கு கலவரத்துடன் எழுதியிருக்கிறது கர்நாடக ஆர்.எஸ்.எஸ்.

தடுத்து நிறுத்துங்க..
கர்நாடகா நிலவரம் குறித்து எழுதப்பட்ட அக்கடிதத்தில், பாஜகவுக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகளை பொதுவெளியில் ஊதிப் பெரிதாக்கி வருகிறது காங்கிரஸ். இதனை உடனே தடுத்து நிறுத்த வேண்டியது அவசியமாகும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஈஸ்வரப்பா காண்டு
கர்நாடகா பாஜகவின் முதல்வர் வேட்பாளரான எதியூரப்பாவுக்கும் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ஈஸ்வரப்பாவுக்கும் ஏழாம் பொருத்தம். கர்நாடகாவில் பாஜகவைப் பொறுத்தவரை கடலோர மாவட்டங்களில்தான் முழுமையான நம்பிக்கையை வைத்திருக்கிறது.

வீரசைவ முழக்கம்
வட கர்நாடகாவில் இந்துக்களாக இதுவரை ஒருமுகப்படுத்தப்பட்டிருந்த லிங்காயத்துகள், தற்போது நாங்கள் இந்துக்கள் அல்ல; வீரசைவம் என்பது தனிமனிதம் என பிரகடனம் செய்து களத்தில் அணிதிரண்டு நிற்பதால் கதிகலங்கி கிடக்கிறது பாஜக. அதேபோல் தென் கர்நாடகா, மைசூர் பகுதிகளில் ஒக்கலிகர் வாக்குகள் மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கும் இதர பிற்படுத்தப்பட்டோரின் வாக்குகள் காங்கிரஸுக்கும் போகும் என்பதால் பாஜக பரிதவிக்கிறது.

மடாதிபதிகளுடன் சந்திப்பு
இதையடுத்து ஒக்கலிகர்களுடன் இணக்கமாக செல்வதற்காக அந்த சமூகத்தின் மடாதிபதிகளுடனான சந்திப்புகளை பாஜக நடத்தி வருகிறது. இப்படி வாக்குகளை பெறுவதற்கே தவியாய் தவிக்கும் பாஜகவுக்கு உட்கட்சி மோதல் பேரிடியாயகத்தான் இருக்கிறது.
-
அவ்வளவு தூரம் சொன்ன டெல்லி மேலிடம்.. "முடியவே முடியாது.." திட்டவட்டமாக மறுத்த சித்தராமையா.. ட்விஸ்ட் -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
பெங்களூரில் புகுந்த உயிரை பறிக்கும் எபோலா? உகாண்டாவில் இருந்த பெண் மருத்துவமனையில் அனுமதி.. திக்திக் -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications