ஜன. 15க்கு பிறகு 'பேடிஎம்' வாலட்டிலுள்ள பணம் ஸ்வாகா? தீயாய் பரவும் தகவல்! உண்மை என்ன தெரியுமா?
மும்பை: பேடிஎம் நிறுவனம் தற்போதைய டிஜிட்டல் உலகில் பண பரிமாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. நகர்ப்புறங்களில் டீக்கடைகளில் கூட பேடிஎம் மூலமான பரிவர்த்தனை நடக்க தொடங்கிவிட்டது. இந்த நிறுவனம் ஒன்97 கம்யூனிகேஷன் என்ற நிறுவனத்தால் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பேடிஎம் பேமென்ட்ஸ் பேங்க் லிமிட்டட் என்ற வங்கியை தொடங்க பேடிஎம் நிறுவனம் ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெற்றுள்ளது. இதன் 51 சதவீத பங்குகளை இந்தியாவை சேர்ந்த தொழிலதிபர் விஜய் சேகர் ஷர்மாவும், 49 சதவீதத்தை ஒன்97 நிறுவனமும் வைத்துள்ளது.

இதன்பிறகுதான், ஒரு வதந்தி சமூக வலைத்தளங்களில் பரவியது. அதில், பேடிஎம் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் வாலட்டிலுள்ள பணத்தையெல்லாம் வங்கி கணக்கிற்கு மாற்றிவிடும். பிறகு அதை பயன்படுத்த முடியாது. ஜனவரி 15ம் தேதிக்குள் வாலட்டிலுள்ள பணத்தை பயன்படுத்திவிடுங்கள், என்று அந்த தகவல் தீயாய் பரவியது.
இதுகுறித்து பேடிஎம் தனது வலைத்தளத்தில் விளக்கம் அளித்துள்ளது. வங்கி தொடங்க உள்ளது உண்மை என்றபோதிலும், பேடிஎம் சேவையில் எந்த மாற்றமும் இல்லை என்றும், வழக்கம்போலவே பயன்பாடு இருக்கும் எனவும், வாலட்டிலுள்ள பணத்தை ஜனவரி 15க்கு பிறகும் கூட பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.
வங்கி வசதி ஆரம்பிக்கப்பட்ட பிறகு இருப்பு தொகைக்கு வட்டி வழங்குவது, டெபிட் கார்டு வழங்குவது உள்ளிட்ட சேவைகளையும் வழங்குவோம் என பேடிஎம் கூறியுள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications