For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பட்ஜெட் 2018 : கிராமப்புற சுகாதார மேம்பாட்டுக்கு ரூ.16,713 கோடி #Budget2018

கிராமப்புற சுகாதாரத்தை மேம்படுத்த 16713 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக அருண் ஜெட்லி அறிவித்து உள்ளார்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

Recommended Video

    இந்த பட்ஜெட்டில் குடியரசு தலைவரின் சம்பளம் உயர்வு எவ்வளவு தெரியுமா ?- வீடியோ

    டெல்லி : கிராமப்புற சுகாதாரத்தை மேம்படுத்த 2018-19ம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் 16,713 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்து உள்ளார்.

    2018-19ம் ஆண்டிற்கான பட்ஜெட் உரையை நாடாளுமன்றத்தில் நிதியமைச்ச அருண் ஜெட்லி இன்று தாக்கல் செய்தார். முன்னதாக பட்ஜெட் உரை குறித்து பேசிய அவர், விவசாயம், கிராமப்புற பொருளாதார மேம்பாடு, ஏழைகளுக்கான சுகாதாரம் போன்றவற்றுக்கு பட்ஜெட்டில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

    Rural Health Care Hospitals will be made in every villages

    அதுபோல பட்ஜெட் உரையில் வரும் நிதியாண்டில் கிராமப்புற சுகாதாரத்தை மேம்படுத்த 16,713 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. நாட்டின் அனைத்து கிராமங்களிலும் கிராமப்புற சுகாதார மையங்கள் சிறப்பான முறையில் செயல்படத்தேவையான உபகரணங்கள் வாங்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    ஜவுளித்துறையை வளர்ச்சியை அதிகரிக்கவும், அந்தத் துறையில் உற்பத்தி மற்றும் தொழிற்நுட்பத்தை மேம்படுத்தவும் இந்த நிதியாண்டில் ஜவுளித்துறைக்கு 7,148 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

    இதன் மூலம் வரும் ஆண்டுகளில் இந்தத் துறை அதிக அளவில் அந்நியச் செலவாணியை ஈட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என்றும், சிந்தெடிக் மற்றும் ரேயான் இழைகள் தயாரிப்பில் அதிக கவனம் செலுத்தப்படும் என்றும் நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்து உள்ளார்.

    English summary
    Rural Health Care Hospitals will be made in every villages says Finance Minister Arun Jaitley. He also added that Health sector need to be improved in every villages and allocated Rs.16713 crores in 2018-19 Budget.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X