பெட்ரூமில் 2வது மனைவி.. ஒரே இரவில் 2 முறை.. ஜன்னல் வழியா வந்த "ரஸ்ஸல் வைப்பர்".. எட்டிபார்த்த கணவர்
கண்ணாடி விரியனை ஏவி மனைவியை கொல்ல முயன்ற கணவர் கைதாகி உள்ளார்
போபால்: குலைநடுங்க வைக்கும் சம்பவம் ஒன்று மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.. இது தொடர்பாக கணவர் உட்பட அவரது நண்பர்கள் கைதாகி உள்ளனர்.. 2 முறை அதிசயமாக உயிர்பிழைத்த பெண்ணை பற்றிதான் மத்திய பிரதேச மாநிலம் முழுக்க பேச்சாக இருக்கிறது.
2 வருடங்களுக்கு முன்பு, கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் நடந்த உத்ராவின் மரணத்தை பார்த்து நாடே நடுநடுங்கி போய்விட்டது.
25 வயதான உத்ராவுக்கு வாய் பேச முடியாது.. கல்யாணம் ஆகி ஒரு வயதில் மகன் உள்ள நிலையில், நகைக்காகவும், 2வது கல்யாணம் செய்து கொள்வதற்காகவும், உத்ராவை பாம்புகளை ஏவி கொன்றுவிட்டார் கணவர் சூரஜ்.

உத்ரா
உத்ராவை கொலை செய்வதற்காக கூகுளில் பாம்புகளை தேடினார் சூரஜ்.. பிறகு பாம்பு பிடிப்பவர்கள் யார், யார் என்று யூடியூப் வீடியோக்களில் தேடி, இறுதியில் பாம்புகளை லாவகமாக கையாளும் சுரேஷ் என்பவருக்கு 10 ஆயிரம் கொடுத்து விஷ பாம்பை வாங்கி வந்துள்ளார். உத்ரா தூங்கும்போது, அந்த பாம்பை அவர் மீது தூக்கி வீசியுள்ளார்.. முதல்முறை உத்ரா சிகிச்சையில் தப்பிவிட்டாலும், 2 முறை அந்த பாம்பு உத்ராவை கொத்தி உள்ளது... படுக்கையிலேயே உயிர் பிரிந்துவிட்டது.

பெட்ரூம்
கொலை செய்யும் அன்றைய இரவு உத்ராவுக்கு சூரஜ் பாயாசம் தந்திருக்கிறார்.. ஆப்பிள் ஜூஸும் தந்திருக்கிறார்.. இவைகள் இரண்டிலுமே தூக்கமாத்திரையை கலந்து தந்திருக்கிறார் சூரஜ்... இதை குடித்ததுமே உத்ரா தூங்கிவிட்டார். அதன்பிறகுதான் பாம்பை கடிக்க வைத்தாராம் சூரஜ்.. உத்ரா மீது ஏவப்பட்ட பாம்பை தோண்டி எடுத்து போஸ்ட் மார்ட்டமும் நடத்தப்பட்டது. முதல்முறையாக ஒரு பாம்புக்கு போஸ்ட் மார்ட்டம் நடந்தது இந்த உத்ரா வழக்கில்தான். எளிதில் மறக்க முடியாத அளவுக்கு பலரையும் நிலைகுலைய வைத்தது இந்த உத்ரா வழக்கு. இப்போதும் ஒரு சம்பவம் அதே போல நடந்துள்ளது.

டபுள் ஷாக்
மத்தியப் பிரதேச மாநிலம் மந்த்சூரை சேர்ந்தவர் மோஜிம்.. இவரது மனைவி பெயர் சானு.. சில வருடங்களுக்கு கணவரிடம் கோபித்து கொண்டு சானு வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.. மனைவி பிரிந்ததால், மோஜிம் 2வது திருமணம் செய்து கொண்டார்.. அந்த பெண்ணின் பெயர் அஜ்மேரி ஹலிமா.. இவர்கள் 2 பேரும் மகிழ்ச்சியுடன் குடும்பத்தை நடத்தி வந்துள்ளனர்.. அப்போது சில காலத்துக்கு பிறகு, திடீரென சானு வீட்டுக்கு திரும்பிவிட்டார்.. முதல் மனைவி வந்துவிடவும், 2வது மனைவியை பாரமாக நினைத்தார் மோஜிம்.. முதல் மனைவியை பார்த்ததுமே மோஜிம்மின் மனமும் மாறிவிட்டது.. அதனால், பாரமாக உள்ள 2வது மனைவி ஹலிமாவை கொலை செய்ய முடிவு செய்தார்.

கண்ணாடிவிரியன்
இயற்கையாகவே இறந்துவிடுவது போல இருக்க வேண்டும் என்று பிளான் செய்தார்.. அதற்காக பாம்பை கடிக்க வைத்து இறக்க முடிவு செய்து, கடந்த 2015-ம் ஆண்டு பாம்பு பிடிக்கும் ஒருவருடன் பேசி, விஷப்பாம்பையும் வீட்டுக் கொண்டு வந்தார்.. கடித்தவுடன் உயிர் போக வேண்டும் என்றால், விஷப்பாம்புதான் சரியாக இருக்கும் என்று நினைத்து, ரஸ்ஸல் வைப்பர் அதாவது கண்ணாடி விரியன் பாம்பினை கொண்டு வந்துள்ளார் மோஜிம்.. சம்பவத்தன்று, பெட்ரூம் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தபோது, 2வது மனைவி ஹலிமா மட்டும் ரூமில் இருந்தார். உடனே பாம்புவை ஜன்னல் வழியாக ரூமில் விட்டார் மோஜிம்..

கண்ணாடி விரியன்
காலையில் எப்படியும் ஹலிமா இறந்துவிடுவார் என்றும் எதிர்பார்த்தார். பாம்பும் கடித்துள்ளது.. ஆனால் உயிர் போகவில்லை.. ஹலிமா இயல்பாக இருப்பதை பார்த்து மோஜிம் அதிர்ந்து போனார்.. உடனே நண்பர்களின் உதவியுடன் ஹலிமாவுக்கு பாம்பின் விஷத்தை எடுத்து, ஊசியாக செலுத்தி உள்ளார்.. இதில் வலி தாங்க முடியாமல் ஹலிமா அலறி துடிக்கவும், அதற்குள் அக்கம்பக்கத்தினரை விரைந்து வந்துவிட்டனர்.. ஹலிமாவை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர்... தீவிர சிகிச்சை தரவும் ஹலிமா இந்த முறையும் பிழைத்துவிட்டார்.. இதற்கு பிறகுதான் விஷயம் போலீசுக்கு போனது.. மோஜிம், பாம்பு பிடிப்பவர் உட்பட பலரையும் போலீசார் இந்த வழக்கில் கைது செய்தனர்.

ரஸ்ஸல் வைப்பர்
இதில், ஆச்சரியம் என்னவென்றால் 2 முறை இவ்வளவு கொடூர விஷப்பாம்பு கடித்தும் ஹலிமாவின் உயிர் பிழைத்தது எப்படி என்றே தெரியவில்லை. பொதுவாக, கண்ணாடி விரியன்கள் பாம்புகள் கடித்தால், உடனே உயிர்போய்விடுமாம்.. அதுமட்டுமல்ல, அந்த விஷம், உடலை விட்டு வெளியேறாது.. அதிலும், இந்த கண்ணாடி விரியன்கள் பாம்பு கடித்துவிட்டால், வாய்விட்டு தண்ணீர் கூட கேட்க முடியாது என்கிறார்கள்.. இந்த பாம்பு கடித்த சில மணி நேரங்களிலேயே அந்த இடம் அழுக ஆரம்பித்துவிடுவாம்.. நரம்புகளிலும் ரத்தம் கட்டிக்கொள்ளும் என்கிறார்கள்.. இந்த சம்பவத்தை பொறுத்தவரை, சரியான நேரத்தில் சிகிச்சை தந்ததால் மட்டுமே ஹலிமா காப்பாற்றப்பட்டுள்ளதாக உறவினர்கள் சொல்கிறார்கள்..!!
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications