டெல்லியில் ரஷிய துணை பிரதமர்- சுஷ்மா ஸ்வராஜூடன் பேச்சுவார்த்தை!
டெல்லி: ரஷிய துணை பிரதமர் டிமித்ரி ஓ ரோகோசின் இன்று டெல்லியில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பில் இருதரப்பு உறவுகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
ரஷிய துணை பிரதமர் டிமித்ரி ஓ ரோகோசின் 2 நாட்கள் பயணமாக இன்று இந்தியாவுக்கு வருகை தந்தார். நரேந்திர மோடி அரசு பதவி ஏற்ற பிறகு ரஷிய தலைவர் ஒருவர் வருவது இதுவே முதல்முறை ஆகும்.
டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை டிமித்ரி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இருதரப்பு உறவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடியை நாளை டிமித்ரி சந்தித்து பேசுகிறார். பாகிஸ்தானுக்கு மி-35 ரக தாக்குதல் நடத்தும் ஹெலிகாப்டர்களை விற்பனை செய்ய ரஷியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதற்கு இந்திய தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட இருக்கிறது.
மேலும் கூடங்குளத்தில் 3-வது மற்றும் 4-வது அணு உலைகள் அமைப்பது தொடர்பாக இந்த ஆலோசனைகளில் விவாதிக்கப்பட இருக்கிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications