சபரிமலை: பம்பை நதியில் நீராட முடியாது.. நீலிமலை, அப்பாச்சி மேடு, சபரி பீடம் வழியேவும் செல்ல முடியாது

Subscribe to Oneindia Tamil

பம்பை: சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்கள் பம்பை நதியில் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது; வழக்கமான நீலிமலை, அப்பாச்சி மேடு, சபரிபீடம் வழியாகவும் செல்ல முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலைத் தடுக்க கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதால் கார்த்திகை மாதங்களில் களைகட்டியிருக்கும் சபரிமலை யாத்திரை பெரும் ஏமாற்றத்துக்குரியதாகிவிட்டது. இந்த முறை குழந்தைகள், மூத்த குடிமக்களுக்கு அனுமதி இல்லை.

கொரோனா பரிசோதனை சான்றிதழ்

கொரோனா பரிசோதனை சான்றிதழ்

கொரோனா பரிசோதனை சான்றிதழுடன்தான் நிலக்கல்லில் இறங்கவே முடியும். அப்படி சான்றிதழ் இல்லை எனில் நிலக்கல்லில் அமைக்கப்பட்டுள்ள பரிசோதனை மையத்தில் கட்டணம் செலுத்தி 30 நிமிடத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பான சான்றிதழைப் பெறலாம்.

பம்பை நீராடலுக்கு தடை

பம்பை நீராடலுக்கு தடை

நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு செல்லும் பக்தர்கள், அங்கு நதியில் புனித நீராடிவிட்டுதான் மலையேற தொடங்குவர். ஆனால் இம்முறை பம்பை நதியில் புனித நீராட அனுமதி இல்லை. அதற்கு பதிலாக பம்பை திருவேணியில் தற்காலிக குளியல் அறைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

 நீலிமலை, அப்பச்சி மேடு பாதை

நீலிமலை, அப்பச்சி மேடு பாதை

இதனைத் தொடர்ந்து சபரிமலை யாத்திரை வழக்கமாக நீலிமலை, அப்பச்சி மேடு, சபரிபீடம் வழியாகத்தான் பெரும்பாலான பக்தர்கள் செல்வார்கள். இந்த முறை இந்த வழிப்பாதை அடைக்கப்பட்டு சுப்பிரமணிய பாதை வழியே பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோல் மலைகளினூடே மேற்கொள்ளப்படும் பெருவழிப் பாதை யாத்திரைக்கும் புல்லுமேடு வழி யாத்திரைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் வருத்தம்

பக்தர்கள் வருத்தம்

நீலிமலையும் அப்பச்சி மேடும் சபரிபீடமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களால் நிரம்பி வழியும் காலம் இது. ஆனால் இந்த முறை அந்த சபரிமலை வனப்பாதை அடைக்கப்பட்டதால் பக்தர்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி இருப்பது ஐயப்ப பக்தர்களை பெரும் வருத்தத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அதேபோல் ஐயப்ப பக்தர்கள் யாத்திரை என்பது குருசாமி ஒருவரது தலைமையில் இருமுடிகட்டி அவரது வழிகாட்டுதலில் குழு குழுவாக மேற்கொள்ளப்படும் பயணம். ஆனால் கொரோனா காலத்தில் சமூக விலகலை கடைபிடித்தபடி யாத்திரையை மேற்கொள்வதில் பக்தர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்ளவும் செய்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+