ஓணம்: சபரிமலை ஐயப்பன் கோவில் 12ம் தேதி நடை திறப்பு
சபரிமலை: ஓணம் மற்றும் புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகிற 12ம் தேதி நடை திறக்கப்படுகிறது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 12ம் தேதி மாலை திறக்கப்படுகிறது. மறுநாள் முதல் ஓணம் சிறப்பு பூஜைகள் தொடங்கும். அன்று முதல் 16ம் தேதி வரை 4 நாட்களுக்கு சபரிமலை வரும் பக்தர்கள் அனைவருக்கும் சிறப்பு ஓண விருந்து வழங்கப்படும்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு பூஜையை தவிர, ஓணம், பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா, விஷூ பண்டிகை மற்றும் விசேஷ நாட்கள் தவிர ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.

இந்த ஆண்டு கேரளாவில் திருவோணப் பண்டிகை வருகிற 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஓணம் பண்டிகையும், புரட்டாசி மாத பூஜையும் சேர்ந்து வருவதால், சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகிற 12ம் தேதி மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரு தலைமையில், மேல்சாந்தி சங்கரன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து பூஜைகள் செய்கிறார்.
இந்தநாட்களில் தினமும் வழக்கமான பூஜைகளுடன், சகஸ்ர கலசாபிஷேகம், களபாபிஷேகம், புஷ்பாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை உட்பட அனைத்து சிறப்பு பூஜைகளும் நடைபெறும். ஓணத்தை முன்னிட்டு, 13ம் தேதி முதல் 16ம் தேதி வரை பக்தர்களுக்கு ஓணம் விருந்து வழங்கப்படும்.
ஓணம் சிறப்பு பூஜைகளுக்கு இடையே புரட்டாசி மாத பிறப்பும் வருவதால் வரும் 13ம்தேதி முதல் தொடர்ந்து 9 நாட்கள் சபரிமலை கோயில் நடை திறந்திருக்கும். 9 நாட்களிலும் தினமும் பக்தர்கள் நெய்யபிஷேகமும் செய்யலாம். 21ம் தேதி இரவு 10 மணியளவில் சபரிமலை கோயில் நடை சாத்தப்படும். அன்றுடன் ஓணம் பண்டிகை மற்றும் புரட்டாசி மாத பூஜைகள் நிறைவடையும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications