ஹில் ஸ்டேஷனுக்கு மனைவியுடன் தனி விமானத்தில் பறந்த சச்சின்
டேராடூன்: கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு சச்சின் டெண்டுல்கர் தனது குடும்பத்தோடு மிசோரியில் ஓய்வு எடுக்கிறார்.
மும்பை வாங்கடே ஸ்டேடியத்தில் தனது 200வது டெஸ்ட் போட்டியை விளையாடிய சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். இதையடுத்து தனது நண்பர்களுக்கு மும்பை அந்தேரி பகுதியில் விருந்து கொடுத்தார்.
இந்நிலையில் அவர் தனது குடும்பத்துடன் பொழுதை கழிக்க மலை வாச ஸ்தலத்திற்கு சென்றுள்ளார்.

முசோரி
சச்சின் தனது குடும்பத்தோடு பொழுதை கழிக்க உத்தரகண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டத்தில் உள்ள முசோரிக்கு இன்று சென்றுள்ளார். தனி விமானம் மூலம் மனைவியுடன் வந்து டேராடூனில் உள்ள ஜாலிகிராண்ட் விமான நிலையத்தில் இறங்கிய சச்சின் அங்கிருந்து நேராக முசோரிக்கு சென்றுவிட்டார்.

நண்பரின் ஹோட்டல்
முசோரியில் அவர் தனது குடும்ப நண்பரும், வியாபார பார்ட்னருமான சஞ்சய் நரங்கின் ஹோட்டலில் தங்குகிறார். முசோரி சச்சினுக்கு பிடித்த இடமாகும் என்பது குறிப்பிடத்தக்கது

ஓடிஐ
முன்னதாக சச்சின் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த கையோடு முசோரிக்கு கிளம்பிவிட்டார். அங்கு சில நாட்கள் ஓய்வு எடுத்துவிட்டு மும்பை திரும்பினார்.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு
முன்பெல்லாம் சச்சின் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை குடும்பத்தோடு கொண்டாட முசோரி செல்வார். தற்போது அந்த வழக்கத்தை மாற்றிக் கொண்டுள்ளார்.

100 சதம்
சர்வதேச போட்டிகளில் 100 சதம் அடித்த ஒரே கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தான். மேலும் ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் வீரரும் சச்சினே. இது போன்ற பல சாதனைகளுக்கு சொந்தக்காரராக உள்ள அவரை ரசிகர்கள் கிரிக்கெட்டின் கடவுளாக பார்க்கின்றனர்.












Click it and Unblock the Notifications