தூய்மை இந்தியா திட்டம்: மோடியை சந்தித்து நன்றி கூறிய சச்சின் டெண்டுல்கர்
டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர், இன்று பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்தார். அப்போது அவர் தூய்மை இந்தியா திட்டத்திற்கு தனக்கு அழைப்பு விடுத்ததற்காகவும் அந்த திட்டத்தில் பங்கேற்ற தன்னை பாராட்டியதற்காகவும் நன்றி தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தூய்மை இந்தியா என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும் பிரதமர் நரேந்திர மோடி குப்பைகளை அகற்றி தெருவையும் சுத்தப்படுத்தினார்.
மேலும் சச்சின் உள்பட சில பிரபலங்களுக்கு தூய்மை திட்டத்தில் பங்கேற்கவும் அழைப்பு விடுத்தார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த திட்டத்தில் தன்னை ஈடுபடுத்தி கொண்ட சச்சின் தனது நண்பர்களுடன் தெருவில் தேங்கிய குப்பைகளை சுத்தம் செய்தார்.

இதில் சச்சின் இணைந்ததற்காக பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டரில் கூறுகையில், சிறந்த பணியை சச்சின் செய்து உள்ளார். சச்சினின் இச்செயல் தூய்மை திட்டத்துக்கு பெரும் ஆதரவை பெற்று தரும் என்றார்.
இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சச்சின் டெண்டுல்கர் தனது மனைவி அஞ்சலியுடன் சென்று பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து நன்றி தெரிவித்தார்.
சான்சத் ஆதர்ஷ் கிராம் யோஜனா திட்டத்தின் கீழ் தானும் ஒரு கிராமத்தை தத்தெடுக்கப் போவதாக கூறிய சச்சின் டெண்டுல்கர், அந்த கிராமத்தில் உள்ள பள்ளி மட்டுமல்லாது, பள்ளிகள், கல்லூரிகளில் விளையாட்டுத்துறையை முன்னேற்றும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாகவும் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 11 ஆம் தேதி சான்சத் ஆதர்ஷ் கிராம் யோஜனா என்ற திட்டத்தை துவங்கி வைத்தார்.கட்சி பாகுபாடு இன்றி ஒவொரு எம்.பியும் 3 கிராமங்களை மேம்படுத்தினால் 2019ம் ஆண்டிற்குள் 2500 கிராமங்கள் மேம்பாடு அடைந்து விடும். இந்த திட்டத்தை பயன்படுத்தி, எம்.எல்.ஏ.,க்களும் கிராமப்புறங்களில் மேம்படுத்த முயற்சிக்கலாம் என தெரிவித்தார். இப்போது இந்த திட்டத்தின் கீழ் தன்னையும் இணைத்துக்கொண்டுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications