பிரதமர் மோடியை சந்தித்த 'கடவுள்'!
பிரதமர் மோடியை கிரிக்கெட்டின் கடவுள் என போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர் இன்று சந்தித்தார்.
டெல்லி: பிரதமர் மோடியை கிரிக்கெட்டின் கடவுள் என போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர் இன்று சந்தித்தார். அப்போது அவருடைய வாழ்க்கை வரலாறு படமான சச்சின் ஏ பில்லியன் ட்ரீம்ஸ் குறித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சச்சின் டெண்டுல்கரின் வாழ்கை வரலாறு 'சச்சின் ஏ பில்லியன் ட்ரீம்ஸ்' என்ற திரைப்படமாக உருவாகியுள்ளது. இத்திரைப்படம் வரும் 26ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
இப்படத்தில் சச்சின் கதாபாத்திரத்தில் அவரே நடித்துள்ளார். திரைப்படம் ரிலீசாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் சச்சின் தனது மனைவி அஞ்சலியுடன் இன்று பிரதமர் மோடியை சந்தித்தார்.

பிரதமர் மோடியுடன் சந்திப்பு
அப்போது சச்சின் ஏ பில்லியன் ட்ரிம்ஸ் குறித்து அவர் பேசியதாக தெரிகிறது. மோடியுடனான சந்திப்பு குறித்து 2 போட்டோக்களை சச்சின் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
|
படம் குறித்து விளக்கம்
அதில் சச்சின் ஏ பில்லியன் ட்ரிம்ஸ் குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் விளக்கியதாகவும் அவரின் ஆசிர்வாதங்களை பெற்றதகவும் தெரிவித்துள்ளார்.
|
மோடிக்கு நன்றி
மற்றொரு டிவிட்டரில் உங்களின் ஊக்கமளிக்கும் செய்திகளுக்கு நன்றி என்றும் சச்சின் குறிப்பிட்டுள்ளார்.
|
இந்தியர்கள் பெருமிதம்
இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியும் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் சச்சின் உடன் ஒரு நல்ல சந்திப்பு இருந்தது. அவரது வாழ்க்கை பயணம் மற்றும் சாதனைகள் ஒவ்வொரு இந்தியனையும் பெருமைகொள்ள செய்கிறது. 1.25 பில்லியன் மக்களுக்கும் ஊக்கமளிக்கிறது என தெரிவித்துள்ளார்.

ஆஸ்கர் நயகன் இசையில்
சச்சின் ஏ பில்லியன் ட்ரீம்ஸ் படத்துக்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மராத்தி, இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இத்திரைப்படம் வெளியாகிறது.
-
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications