சதானந்தகவுடா மகன் மீதான புகார் பற்றி மீடியாக்கள் செய்தி வெளியிடக்கூடாது: கோர்ட்இடைக்கால தடை
பெங்களூர்: சதானந்தகவுடா மகன் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து செய்திவெளியிடக்கூடாது என்று குறிப்பிட்ட செய்தி நிறுவனங்களுக்கு தடை விதித்து கோர்ட்உத்தரவிட்டுள்ளது.
மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்தகவுடா மகன் மீதான பாலியல் புகார் குறித்த செய்திகளைஒளிபரப்பவும், பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளிக்கவும்கோர்ட்டில் தடையுத்தரவு கேட்டு சதானந்தகவுடா மகன் கார்த்திக் கவுடா பெங்களூர் கோர்ட்டில்மனு தாக்கல் செய்தார்.

இதையேற்றுக்கொண்ட நீதிமன்றம், டிவி9, சுவர்ணா, பப்ளிக் டிவி மற்றும் பெங்களூரிலிருந்துவெளியாகும் ஆங்கில மற்றும் கன்னட தினசரி பத்திரிகைகள் சிலவற்றுக்கு செய்தி ஒளிபரப்பஇடைக்கால தடை விதித்துள்ளது. மொத்தம், 12 செய்தி நிறுவனங்கள் இந்த தடையின்கீழ் வந்துள்ளன.பிற மொழி சேனல்கள், பிற மொழி இணையதளங்களுக்கு இந்த தடை உத்தரவு பொருந்தாது.
குற்றச்சாட்டு இன்னும் நிரூபணமாகவில்லை என்பதால், இதுகுறித்து செய்தி ஒளிபரப்புவதுஎன்பது, கார்த்திக்கின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக அமைந்துவிடும் என்பதால் கோர்ட்இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளதாக அவர் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். மனு மீதானவழக்கு விசாரணை இம்மாதம் 6ம்தேதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.அதுவரை இந்த தடை உத்தரவு பொருந்தும். இதனிடையே, கோர்ட் உத்தரவுக்கு பிறகும் கன்னடசேனல்கள் சில பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நடிகையின் பேட்டியை எடுத்து ஒளிபரப்பின.
இதுகுறித்து அந்த சேனல் வட்டாரங்களிடம் கேட்டபோது, கோர்ட்டில் வெளியான உத்தரவு குறித்துஎங்களுக்கு தெரியும், இருப்பினும் எங்கள் கைகளுக்கு இன்னும் கோர்ட் ஆர்டர் கிடைக்கவில்லைஎன்பதால் ஒளிபரப்பி வருகிறோம் என்று தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications