மக்களை கஷ்டப்படுத்தி ரசிக்கும் 'சாடிஸ்ட்' காங்கிரஸ்.. ஜெயந்தி கடிதம் பற்றி ஜேட்லி விளாசல்
டெல்லி: இவ்வளவு நாளாக எந்த சந்தேகம் இருந்ததோ அது முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் கடிதம் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அரசு நிர்வாகம் முடங்கிப்போய் கிடந்ததை ஜெயந்தியின் கடிதம் எடுத்துரைக்கிறது. இந்த சம்பவங்கள் நடக்கும்போது பிரதமர் அதை மவுனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்துள்ளார். இவ்வளவு நாட்களாக இருந்து வந்த சந்தேகத்தை இக்கடிதம் நீக்கியுள்ளது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மக்களை தொல்லைபடுத்தி அதன் மூலம் சந்தோஷம் அடையும் மன நிலையில் இருந்துள்ளது. இது ஒரு சாடிஸ்ட் மனநிலையாகும்.
முக்கியமான திட்டங்களுக்கு அனுமதி கொடுக்க வேண்டியது சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் பொறுப்பாகும். ஆனால், அந்த அனுமதியை கொடுக்கவிடாமல் தாமதம் செய்து, நாட்டின் வளர்ச்சியை முந்தைய அரசு கெடுத்துள்ளது.
இவ்வாறு ஜெட்லி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications