பாரத மாதா கையில் 'காவிக்கொடி' இல்லாத குறை தான்... நாட்டையே தன்வசமாக்கி வரும் பாஜக!
கடந்த 3 ஆண்டுகளில் பாஜக நாட்டில் அபிரிமித வளர்ச்சியை கண்டுள்ளது. 19 மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்துள்ள பாஜக இடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலிலும் வெற்றி எங்களுக்கே என்று சொல்லி வருகின்றன.
டெல்லி : பாரதமாதா கையில் காவிக்கொடி மட்டும் இல்லாத குறையாக பாஜக தன்னுடைய 3 ஆண்டுகால ஆட்சியில் சுமார் 19 மாநிலங்களில் ஆட்சியை பிடித்துவிட்டது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 8 மாநில தேர்தலிலும் பாஜக ஆட்சியை கைபற்றும் என்று வெற்றிக் கொண்டாட்டத்தில் உள்ள பாஜக தெரிவித்து வருகிறது.
குஜராத், ஹிமாச்சலில் ஆட்சிக்கட்டிலில் அமைந்துள்ள பாஜக நாடு முழுவதும் கொஞ்சம், கொஞ்சமாக இமயம் முதல் காவிக்கொடியை பறக்கவிட்ட சந்தோஷத்தில் இருக்கிறது. கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதற்கு பிரதமர் நரேந்திர மோடியின் அலை தான் காரணம் என்று சொல்லப்பட்டது. அந்த மோடி அலையானது பாஜகவிற்கு பலன தந்திருக்கிறது என்றே சொல்லாம். நாட்டில் மொத்தமுள்ள 29 மாநிலங்களில் 19 மாநிலங்களில் காவிக்கொடி பறக்கிறது.
பொதுத் தேர்தல் நடந்து முடிந்த 5 மாதத்தில் மஹாராஷ்டிரா சட்டசபைக்கு நடந்த தேர்தலில் 122 இடங்களை வென்று பாஜக ஆட்சி அமைத்தது. இதனைத்தொடர்ந்து ஹரியானா தேர்தலில் மொத்தமுள்ள 90 இடங்களில் 47 இடங்களில் வெற்றி கண்டது. ஜார்க்கண்ட் மாநில சட்டசபையிலும் கூட்டணி கட்சியின் ஆதரவுடன் பெரும்பான்மையை பெறுறு அட்சி அடைத்ததது.

2015ல் தொடங்கிய வேட்டை
2015ல் நடந்த டெல்லி யூனியன் பிரதேச தேர்தல் மற்றும் பீஹார் சட்டமன்ற தேர்தல் பாஜகவிற்கு எதிராக அமைந்தது. எனினும் அசாமில் 16 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சிக்கு முடிவு கட்டி வெற்றியை தன்வசமாக்கியது பாஜக.

பாஜகவிடம் இருந்து தப்பிய மாநிலங்கள்
பாஜகவின் குறி தப்பியது மேற்குவங்கம், கேரளா மற்றும் தமிழகத்தில் தான். தமிழகம் மற்றும் மேற்குவங்கத்தில் மாநில கட்சிகள் ஆட்சியைக் கைப்பற்ற கேரளாவில் மார்க்சிஸ்ட் கட்சி பாஜகவை விரட்டியது. எனினும் இந்த மாநிலங்களிலும் காவிக்கொடி பறக்கும் என்ற உறுதியோடு இருக்கின்றனர் பாஜகவினர்.

தேய்ந்து வரும் காங்கிரஸ்
பீஹாரில் மெகா கூட்டணியை உடைத்து முதல்வர் நிதிஷ்குமார் அரசுக்கு ஆதரவளித்து ஆட்சியில் பங்கு பெற்றது பாஜக. 3 ஆண்டில் அடுத்தடுத்து தனது அரசியல் சாணக்கியத் தனத்தால் வெற்றிபெற்று வருகிறது பாஜக அதே சமயம் காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக தேய்பிறையாகி வருகிறது.

கர்நாடகாவை குறி வைக்கும் பாஜக
காங்கிரஸ் ஆளும் மிகப்பெரிய மாநிலம் என்றால் அது கர்நாடகா தான். அங்கும் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த மாநிலத்தை தக்கவைத்தால் மட்டுமே காங்கிரஸ் கட்சியின் இருப்பு என்பது நாட்டில் இருக்கும். இல்லையென்றால் நாடு மொத்தமும் காவி மயம் தான் என்பதில் சந்தேகமில்லை.

கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் பாஜக
அடுத்த ஆண்டில் கர்நாடகா, மேகாலயா, நாகாலந்து, திரிபுரா, ராஜஸ்தான், மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இங்கும் காவிக்கொடியை பறக்கவிட்டு பாரத மாதா கையில் காவிக்கொடியை பிடிக்க வைப்போம் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறது பாஜக விழிக்குமா 132 ஆண்டு பாரம்பரியமிக்க கட்சி என்ற பெயரை மட்டுமே வைத்துக் கொண்டு தற்போது பரிதாப நிலையில் இருக்கும் காங்கிரஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications