For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"காவி"யை பறக்க விட்ட பாஜக.. எதிர்ப்புகளை நொறுக்கி.. 3 இடங்களில் மாஸ்.. விழிக்கும் ம.பி. காங்கிரஸ்

3 தொகுதிகளில் மத்திய பிரதேசத்தில் பாஜக வெற்றி பெற்றுள்ளது

Google Oneindia Tamil News

போபால்: மத்திய பிரதேசத்தில் 3 தொகுதிகளில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான பாஜக 2 இடங்களை கைப்பற்றி அசத்தியுள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து மக்கள் பாஜக மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் விமர்சனங்களை பாஜக தவிடுபொடியாக்கி உள்ளது.
13 மாநிலங்களில் மூன்று மக்களவை தொகுதிகள், 29 சட்டப்பேரவைத் தொகுதிகளில் கடந்த அக்டோபர் 30-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.. பெரும்பாலான தொகுதிகளில் பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் நேரடிப் போட்டி நிலவியது.

இதன் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மற்றும் பிராந்திய கட்சிகள் அதிக தொகுதிகளில் வெற்றிபெற்றன. பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டது..

13 மாநில இடைத் தேர்தல் முடிவு: பாஜக vs காங்கிரஸ்.. ஓங்கியது யார் கை? ரிசல்ட் சொல்லும் பாடம்! 13 மாநில இடைத் தேர்தல் முடிவு: பாஜக vs காங்கிரஸ்.. ஓங்கியது யார் கை? ரிசல்ட் சொல்லும் பாடம்!

பாஜக

பாஜக

அதாவது 14 மாநிலங்களில் 29 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக கடும் பின்னடைவை சந்தித்துள்ளது...ஆனால் எதிர்கட்சிகள் 16 இடங்களை கைப்பற்றி உள்ளன... இதில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளதால் ஆளும் பாஜக அதிர்ச்சி அடைந்துள்ளது... மேற்கு வங்கத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளையும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கைப்பற்றியது... பெரும்பாலான இடங்களில் காங்கிரஸ் பெற்றுள்ள வெற்றியானது வரப்போகும் மக்களவை தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும் என்று நம்பப்படுகிறது.

 அபார வெற்றி

அபார வெற்றி

எனினும், மத்திய பிரதேச மாநிலம் பாஜகவை கைவிடவில்லை.. இங்குள்ள கன்ட்வா மக்களவை தொகுதியில், பாஜக வேட்பாளராக ஞானேஷ்வா் பாட்டீல், காங்கிரஸ் வேட்பாளராக ராஜ்நாராயண் சிங் பூா்ணி ஆகியோர் நேரடியாக களம் கண்டனர்.. ஞானேஷ்வா் பாட்டீல் 82,140 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.. அதேபோல, தாத்ரா நகா் ஹவேலி தொகுதி தோதலில் சிவசேனை சாா்பில் கலாபென் டெல்கரும் பாஜக சாா்பில் மகேஷ் காவித்தும் போட்டியிட்டனா்... இதில் கலாபென் டெல்கா் 51,269 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

 விமர்சனங்கள்

விமர்சனங்கள்

அதாவது, 3 தொகுதிகளில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான பாஜக 2 இடங்களை கைப்பற்றி அசத்தியுள்ளது பாஜகவின் வெற்றியாக பார்க்கப்படுகிறது.. இத்தனைக்கும் பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து மக்கள் பாஜக மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது.. இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்துதான் காங்கிரசும் பிரச்சாரத்தை மேற்கொண்டது.. ஆனால், அத்தனை விமர்சனங்களை பாஜக தவிடுபொடியாக்கி விட்டது.

நம்பிக்கை

நம்பிக்கை

இதில், காங்கிரஸின் கோட்டை என்று அழைக்கப்படும் பிரித்விபூர் மற்றும் ஜோபாத் ஆகிய இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது, அக்கட்சிக்கு நம்பிக்கையை ஊட்டி வருகிறது.. பிரித்விபூர், ஜோபாத் இந்த இரண்டுமே காங்கிரஸின் செல்வாக்கு மிக்க தொகுதிகள்.. இதில், சுமார் 31 ஆண்டுகள் பாஜக வசம் இருந்த ராய்கான் தொகுதியைதான் காங்கிரஸ் தட்டி பறித்துள்ளது... மேலும், கந்த்வா மக்களவைத் தொகுதியையும் பாஜக தக்கவைத்துக் கொண்டது...

 தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையம்

அக்கட்சியின் ஞானேஷ்வர் பாட்டீல் 81,500 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சியின் ராஜ்நாராயண் சிங் பூர்ணியை தோற்கடித்தார்.காங்கிரசுக்கு இது பெருத்த சறுக்கலாக அமைந்துள்ளது.. இதுகுறித்து அம்மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நரேந்திர சலுஜா சொல்லும்போது, தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டுவிட்டது.. இதுகுறித்து பலமுறை நாங்கள் புகார் தெரிவித்துள்ளோம்.. ஆனால் நடவடிக்கை இல்லை.. எனினும், எங்கள் கட்சியின் தோல்விக்கான காரணத்தை ஆராய போகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

 காங். அதிர்ச்சி

காங். அதிர்ச்சி

"சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ்" என்ற பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஆதரிப்பதாக சொல்லி, பாஜகவை தேர்ந்தெடுத்த தொகுதி மக்களுக்கு முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நன்றி தெரிவித்தார்... அதேசமயம் மற்ற மாநில தேர்தல் வெற்றிகள் பாஜகவுக்கு சறுக்கலை தந்த நிலையில், மத்திய பிரதேசம் மட்டும் கைதூக்கி விட்டுள்ளது அக்கட்சிக்கு தெம்பை தந்து வருகிறது.

English summary
Saffron surge in Congress bastions in Madhya pradesh and three constitutions victory
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X