மான் வேட்டை வழக்கில் நடிகர் சல்'மான்' கானுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
1998ல் நடந்த பட சூட்டிங்போது மான்களை வேட்டையாடியதாக நடிகர் சல்மான் கான் உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட வழக்கில் ஜோத்புர் கோர்ட் இன்று தீர்ப்பு அளித்தது. சல்மான்கான் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

ஜோத்புர்: 1998ம் ஆண்டு நடந்த திரைப்பட சூட்டிங்போது மான்களை வேட்டையாடியதாக நடிகர் சல்மான் கான் உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட வழக்கில் ஜோத்புர் கோர்ட் இன்று தீர்ப்பு அளித்தது. சல்மான் கான் குற்றவாளி என்றும் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நடிகர் சைப் அலி கான், நடிகைகள் தபு, சோனாலி பிந்தரே, நீலம் விடுவிக்கப்பட்டனர். சல்மானுக்கு அதிகபட்சம் 6 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கலாம் என்று தெரிகிறது.

பிரபல ஹிந்தி நடிகர் சல்மான் கான் உள்ளிட்டோர், ராஜஸ்தானில் 1998ல் ஹிந்தி பட சூட்டிங்கில் இருந்தனர். அப்போது அங்குள்ள வனப் பகுதிக்கு வேட்டையாடசென்றுள்ளனர். இரண்டு மான்களை சுட்டுக் கொன்றதாக, நடிகர்கள் சல்மான் கான், சைப் அலி கான், நடிகைகள் தபு, சோனாலி பிந்தரே, நீலம் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது.
உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்ததாக தனியாக ஒரு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் சல்மான் விடுதலை செய்யப்பட்டார்.
மான்களை வேட்டையாடியது தொடர்பான வழக்கில் ஜோத்புர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது. சல்மான் கான் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சல்மான் கானிற்கான தண்டனை விவரங்களையும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
சல்மான் கான் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்கவும், ரூ. 10 ஆயிரம் அபராதம் செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நடிகர் சைப் அலி கான், நடிகைகள் தபு, சோனாலி பிந்தரே, நீலம் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications