நாளை தப்புவாரா சல்மான்...? ரூ 200 கோடி முதலீடு செய்தவர்கள் 'பக் பக்' காத்திருப்பு!
மும்பை: சல்மான்கான் போதையில் கார் ஓட்டி ஒருவரைக் கொன்ற வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாகும் நிலையில், அவரை நம்பி சினிமாவில் ரூ.200 கோடி முதலீடு செய்துள்ள தயாரிப்பாளர்கள் பதட்டத்துடன் காத்திருக்கின்றனர்.
இந்தி நடிகர் சல்மான்கான் கடந்த 2002-ம் ஆண்டு செப்டம்பர் 28-ந் தேதி நள்ளிரவு மும்பை பாந்திராவில் மதுபோதையில் வேகமாக கார் ஓட்டி சென்று விபத்து ஏற்படுத்தியதாக போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

12 ஆண்டுகளாக இந்த வழக்கு நடந்து வருகிறது. இந்த குற்றச்சாட்டில் அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் நாளை (6-ந் தேதி) தீர்ப்பு வெளியாகிறது.
இந்த நிலையில் சல்மான்கானை நம்பி ரூ 200 கோடி வரை தயாரிப்பாளர்கள் முதலீடு செய்துள்ளனர்.
சல்மான்கான், நடிகை கரீனா கபூர் ஜோடி சேர்ந்துள்ள ‘பஜ்ரங்கி பாய்ஜான்' என்ற படமும், சோனம் கபூருடன் இணைந்து நடித்துள்ள ‘பிரேம் ரத்தான் தான் பாயோ' என்ற திரைப்படமும் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளன.
இது தவிர, ‘தாபங்-3' மற்றும் ‘என்ட்ரி மெய்ன் நோ என்ட்ரி' உள்ளிட்ட மேலும் 4 படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார்.
இந்த வழக்கில் அவருக்கு ஒன்றும் நேராது என்ற நம்பிக்கை இருப்பதாக, சல்மானின் தயாரிப்பாளர்கள் சொன்னாலும், உள்ளுக்குள் பயத்துடனே நாளைய தீர்ப்பை எதிர்நோக்குகின்றனர்.
இன்னொரு பக்கம், ராஜஸ்தானின் அரிய வகை மான்களை வேட்டையாடி வழக்கும் தீவிரமடைந்துள்ளது. இந்த வழக்கிலும் அவருக்கு சிறைத் தண்டனை காத்திருக்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications