சத்தீஷ்கரில் சமாஜ்வாதி கட்சி தலைவரை கடத்திக் கொன்ற மாவோயிஸ்டுகள்.. உடலை எடுக்கவிடாமல் அட்டூழியம்
பிஜாபூர்: சத்தீஷ்கர் மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சி தலைவர் சந்தோஷ் புனேம் மாவோஸ்ட்டு தீவிரவாதிகளால் கடத்தி கொல்லப்பட்டுள்ளார். பிஜாபூர் மாவட்டத்தில் நடந்த இந்த படுகொலை சம்பவத்தை போலீசார் உறுதிபடுத்தி உள்ளனர்.
சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள பிஜாபூர் மாவட்டத்தின் பாஸ்டர் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் புனேம். இவர் சத்தீஷ்கர் மாநில சமாஜ்வாதி கட்சியின் துணை தலைவராக இருந்து வந்தார். இவர் அண்மையில் பிஜாபூர் சட்டமன்ற தொகுதியில் சமாஜ்வாதி சார்பில் போட்டு தோல்வி அடைந்தார்.

இவர் கட்டிடங்கள் கட்டும் ஒப்பந்ததாரராக பணியாற்றி வருகிறார். மரிமாலா என்ற கிராமத்தில் கட்டப்பட்டு வந்த கட்டிடத்தை பார்வையிடுவதற்காக சந்தோஷ் அங்கு செவ்வாய்கிழமை சென்று இருந்தார். அப்போது மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சந்தோஷை அடித்து மிரடடி கடத்தி சென்றனர்.
இந்நிலையில் சந்தோஷின உடல் மரிமாலா பகுதியைச் சேர்ந்த காவல்நிலையத்தில் இருந்து 16 கிலோமீட்டர் தள்ளி அடர்ந்த வனப்பகுதியில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.. இது தொடர்பாக தகவல் அறிந்து அங்கு சென்று போலீசார் உடலை மீட்க முயன்றனர்.
இதற்காக ஒரு பொலிரோ வாகனம் உள்பட 3 வாகனங்களில் போலீசார் சென்றுள்ளனர். ஆனால் வாகனத்தை தாக்கி தீவைத்து மாவோஸ்ட்டுகளின் அட்டூழியம் செய்தனர். மேலும் சந்தோஷின் உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கவும் மாவோயிஸ்டுகள் மறுத்துவிட்டனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications