சமாஜ்வாதி கட்சியிலிருந்து ராம்கோபால் யாதவை நீக்கிய உத்தரவை ஒரே மாதத்தில் வாபஸ் பெற்ற முலாயம் சிங்!
சென்ற அக்டோபரில் இருந்து 6 ஆண்டுகளுக்கு சமாஜ்வாதி கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ராம்கோபால் யாதவ் மீண்டும் அக்கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லக்னோ: மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் ராம்கோபால் யாதவ் சமாஜ்வாதி கட்சியிலிருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கப்படுவதாக அக்டோபரில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் அக்கட்சியில் அவரை சேர்த்துள்ளதாக அதன் தலைவர் முலாயம் சிங் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் ஆளும் சமாஜ்வாதி கட்சியில் முலாயம் சிங்கிற்கும் அவரது மகனும் மாநில முதலமைச்சருமான அகிலேஷ் யாதவிற்கும் இடையே எழுந்த மோதலில் அக்டோபர் மாதத்திலிருந்து எதிர்வரும் 6 ஆண்டுகளுக்கு ராம் கோபால் யாதவை கட்சியிலிருந்து நீக்குவதாக அதிரடியாக அறிவித்தார் முலாயம் சிங்.

முதலமைச்சர் அகிலேஷ் யாதவிற்கு மிகவும் நெருக்கமாக இருந்து வந்தார் ராம் கோபால் யாதவ். இந்நிலையில், ராம்கோபால் யாதவ் சமாஜ்வாதி கட்சியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளதாக முலாயம்சிங் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து, சமாஜ்வாதி கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள பத்திரிகை செய்தியில், ராம் கோபால் யாதவ் கட்சியின் மாநிலங்களவைத தலைவராக நீட்டிப்பார் என்றும், கட்சியின் தேசிய நாடாளுமன்ற குழு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளை அவர் வகிப்பார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 23-ஆம் தேதி முதல் 6 ஆண்டுகளுக்கு சமாஜ்வாதி கட்சியில் இருந்து ராம்கோபால் யாதவ் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
முலாயம்சிங் மற்றும் சிவபால்சிங் உறவினரான் ராம்கோபால் யாதவ் மாநில முதலமைச்சர் அகிலேஷ் யாதவிற்கு நெருக்கமாக செயல்பட்டு குடும்பத்தில் பிரச்னையை ஏற்படுத்த காரணமாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இருப்பினும், தனது தந்தை முலாயம் சிங் யாதவுக்கு தமக்கும் இடையே எந்தப் பிரச்னையும் இல்லை என அகிலேஷ் யாதவ் கூறி வந்தார்.
ராம்கோபால் யாதவை கட்சியை விட்டு நீக்கும்போது அவர் மீது சிவ்பால் யாதவ் கடுமையான குற்றச்சாட்டுக்களை சுமத்தினார். அதாவது, பாஜகவுடன் இணைந்து உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியை பலவீணப்படுத்தும் சதிச் செயலில் ராம் கோபால் யாதவ் ஈடுபட்டதாக அவர் சாடினார்.
மேலும், அகிலேஷ்யாதவ் அரசின் செயல்பாடுகளுக்கு மக்கள் மத்தியில் கெட்ட பெயர் வாங்கும் நடவடிக்கைகளில் ராம்கோபால் ஈடுபட்டதாகவும் சிவபால் குற்றம் சாட்டினார்.
பாஜக உயர் மட்டத்தலைவர்களை ராம்கோபால் யாதவ் மூன்று தடவை சந்தித்ததாகவும் ஊழல்வாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாகவும் சிவ்பால் கடுமையாக சாடினார்.
ராம்கோபால் யாதவை கட்சியில் இருந்து நீக்கிவுடன் சிவ்பால் உள்ளிட்ட மேலும் 3 பேரை அகிலேஷ் அவரது அமைச்சரவையிலிருந்து அதிரடியாக நீக்கினார் .
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications