மனைவிக்கு உடம்பு சரியில்லை: பரோலை 30 நாட்கள் நீட்டிக்க கோரும் நடிகர் சஞ்சய் தத்
மும்பை: உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கும் மனைவி மான்யதாவை அருகில் இருந்து கவனித்துக் கொள்ள பரோலை மேலும் 30 நாட்கள் நீட்டிக்கக் கோரி விண்ணப்பித்துள்ளார் நடிகர் சஞ்சய் தத்.
1993ம் ஆண்டு மும்பையில் நடந்த குண்டுவெடிப்புகளின் போது தனது வீட்டில் சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்ததற்காக இந்தி நடிகர் சஞ்சய் தத் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது. அவர் ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டு ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்நிலையில் அவர் மீதமுள்ள தண்டனை காலத்தையும் சிறையில் கழிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது. இதையடுத்து அவர் கடந்த மே மாதம் போலீசில் சரண் அடைந்தார். சரண் அடைந்த அவர் புனேவில் உள்ள ஏர்வாடா சிறையில் அடைக்கப்பட்டார்.

பரோல்
சஞ்சய் தத்தின் மனைவி மான்யதாவுக்கு நுரையீரலில் கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சஞ்சய் ஒரு மாத பரோலில் கடந்த டிசம்பர் மாதம் 21ம் தேதி வெளியே வந்தார்.

அறுவை சிகிச்சை
மான்யதாவுக்கு அறுவை சிகிச்சை நடந்ததால் சஞ்சயின் பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஜனவரி 21ம் தேதி சிறைக்கு திரும்ப வேண்டிய அவர் வரும் 21ம் தேதி சிறைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டது.

பரோல் நீட்டிப்பு
ஏற்கனவே உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கும் மனைவியை அருகில் இருந்து கவனிக்க வேண்டும் என்று கூறி தான் சஞ்சய் பரோல் கேட்டார். இந்நிலையில் அதே காரணத்தை கூறி பரோலை மேலும் 30 நாட்கள் நீட்டிக்க கோரியுள்ளார்.

கண்டனம்
முன்னதாக சஞ்சய் தத்துக்கு ஆதரவாக போலீசார் செயல்படுவதாகக் கூறி அரசியல் கட்சியினர் ஏர்வாடா சிறை முன்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications