நான் (மறுபடியும்) ஜெயிலுக்கு போறேன்… ஜெயிலுக்கு போறேன்… சஞ்சய் தத்
மும்பை: பி.கே. படம் பார்ப்பதற்காக 14 நாட்கள் பரோலில் வந்த சஞ்சய் தத் மீண்டும் சிறைக்கு திரும்பியுள்ளார். பரோல் காலத்தை நீட்டிக்க கோரி விண்ணப்பித்து காத்திருந்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியதால் வேறு வழியின்றி அவர் ஏரவாடா சிறைக்குள் நேற்று சென்றார்.
1993-ஆம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் சஞ்சய் தத்துக்கு விதிக்கப்பட்ட 6 ஆண்டு சிறைத் தண்டனையை உச்ச நீதிமன்றம் கடந்த 2013ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆண்டுகளாகக் குறைத்தது.
சஞ்சய் தத் ஏற்கெனவே 18 மாதங்கள் தண்டனையை அனுபவித்து விட்டார். இதனையடுத்து மீதமுள்ள நாட்களை அவர் சிறையில் கழிக்க வேண்டும். ஆனால் அடிக்கடி பரோலில் வந்து ரெஸ்ட் எடுத்துவிட்டு போகிறார். பின்னர் படம் பார்க்கவும் பரோலில் வருகிறார் சஞ்சய் தத்.

அடிக்கடி பரோல்
தனது தண்டனைக் காலத்திற்கிடையில் இதுவரை சிறை விடுமுறை எனப்படும் பரோலில் 118 நாட்களை சிறைக்கு வெளியே கழித்துள்ள சஞ்சய் தத், சிறை செல்வதற்கு முன் அமீர் கான், அனுஷ்கா சர்மாவுடன் சேர்ந்து "பிகே" என்ற இந்தி படத்தில் நடித்தார்.
படம் பார்க்க வந்த சஞ்சய்
இந்தப் படம் வெளியானதைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் மாத கடைசியில் மீண்டும் 14 நாட்கள் பரோலில் வெளியில் வந்தார். அவரது பரோல் நேற்றுடன் முடிவடைந்தது.

கிடைக்கலையே
மீண்டும் 14 நாட்கள் பரோல் நீட்டிப்பு கேட்டு விண்ணப்பித்தார். ஆனால் அவருக்கு பரோல் நீட்டிக்கப்படவில்லை. இதனையடுத்து அவர் தனது மனைவி, குழந்தைகளிடம் விடைபெற்றுக்கொண்டு சிறை திரும்பினார்.
பரோல் சர்ச்சை
கடந்த 2013 மே மாதத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள எரவாடா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சஞ்சய் தத். உடல்நலம் பாதிக்கப்பட்டதை காரணம் காட்டி இடையில் மூன்று மாதம் பரோலில் வந்தார். அவரின் பரோல் நீட்டிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
விசாரணைக்கு உத்தரவு
கடந்த ஆண்டு டிசம்பர் முதல் சஞ்சய் தத்துக்கு வழங்கப்பட்ட பரோல் குறித்து விசாரணை நடத்த மகாராஷ்டிரம் மாநிலம் உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications