சப்பாத்தியா? இதெல்லாம் சாப்பிட முடியாது.. சிறையில் அடாவடி செய்தது யாருன்னு பாருங்க.. ஷாக் ஆகிடுவீங்க
கொல்கத்தா: கொல்கத்தா மருத்துவர் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான சஞ்சய் ராய், சிறையில் வழங்கப்படும் உணவில் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. உணவு சுத்தமாக பிடிக்கவில்லை.. எனக்கு நூடுல்ஸ் வேண்டும் என்று ஜெயில் அதிகாரிகளுடன் அவர் சண்டை போட்டதாக கூறப்படுகிறது.
சிறை சாலையில் வழங்கப்பட்ட "ரொட்டி-சப்ஜி" உணவு பிடிக்கவில்லை என்று கூறிய சஞ்சய் ராய், அதற்கு பதிலாக முட்டை வழங்க வேண்டும், நூடுல்ஸ் வழங்க வேண்டும், சைனீஸ் உணவுகள் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். சிறை விதிகளின்படி, அனைத்து கைதிகளும் ஒன்றாக தயாரிக்கப்படும் உணவையே சாப்பிட வேண்டும், எனவே அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.

சோதனை; முன்னதாக கொல்கத்தாவின் ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மருத்துவர் கொலை மற்றும் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய் ராய் தான் நிரபராதி என்று வாக்குமூலம் அளித்துள்ளார். சிலரால் திட்டமிட்டபடி சட்டத்தில் சிக்க வைக்கப்படுவதாகவும் தனது வழக்கறிஞர் கவிதா சர்க்காரிடம் கூறியுள்ளார்.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொலை நடந்த ஒரு நாள் கழித்து.. அதாவது ஆகஸ்ட் 10 அன்று சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார். சம்பவம் நடந்த செமினார் ஹால் அருகே அவரது புளூடூத் ஹெட்செட்டும் கண்டுபிடிக்கப்பட்டது.
பாலிகிராஃப் சோதனையின் போதும் அவர் குற்றமற்றவர் கூறி உள்ளார். சஞ்சய் ராயிடம் 10 கேள்விகள் கேட்கப்பட்டன, அந்தப் பெண்ணைக் கொன்றதாகக் கூறப்படும் பிறகு அவர் என்ன செய்தார் என்பது உட்பட முக்கியமான கேள்விகள் கேட்கப்பட்டு உள்ளது. அவரை கொலை செய்யாததால் அந்த கேள்வி செல்லாது என்று சிபிஐ அதிகாரிகளிடம் கூறினார். தான் கொலை செய்யவில்லை என்றுதான் பல இடங்களில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
பாலிகிராஃப் சோதனையில், ராய், மருத்துவமனையின் செமினார் ஹாலுக்குள் நுழைந்தபோது அந்தப் பெண் சுயநினைவின்றி இருந்ததாகக் கூறியுள்ளார். அதோடு சம்பவம் நடந்த ஆகஸ்ட் 9 அன்று அந்த அறைக்குள் அந்த பெண் ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டதாகவும், இதனால் பீதியுடன் அறையை விட்டு வெளியேறிவிட்டேன் என்றும் வாக்குமூலம் கொடுத்துள்ளாராம். இதில்தான் புளூடூத் ஹெட்செட் விழுந்து இருக்கும் என்று வாக்குமூலம் கொடுத்துள்ளாராம்.
பாதிக்கப்பட்டவரை தனக்குத் தெரியாது என்றும், தான் நிரபராதி, ஆனால் நான் சொன்னால் நம்ப மாட்டார்கள். நான் முன்பே புகார் கொடுத்திருப்பேன். ஆனால் அப்படி செய்தால் நம்ப மாட்டார்கள் என்று விட்டுவிட்டேன் என்று, சஞ்சய் ராய் கூறியுள்ளார்.

சந்தேகம்: ஆனால் ஆகஸ்ட் 9-ம் தேதி கொல்கத்தாவின் ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி சஞ்சய் ராய்க்கு தொடர்பு இருப்பதாக டிஎன்ஏ மற்றும் தடயவியல் அறிக்கைகள் உறுதி செய்துள்ளன.
இந்த ஆய்வின் முடிவில் வேறு யாருக்கும் இதில் தொடர்பு இருக்க வாய்ப்பு இல்லை என்பதால் டிஎன்ஏ மற்றும் தடயவியல் அறிக்கைகள் உறுதி செய்துள்ளன. மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்துடன் கலந்தாலோசிக்கும். (AIIMS) நிபுணர்கள் இறுதிக் கருத்துக்கு இந்த ஆய்வு அறிக்கை அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வருகின்றன. இதுவரை செய்யப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி, பலாத்காரம் மற்றும் கொலையில் வேறு எந்த நபருக்கும் தொடர்பு இருப்பதாக இதுவரை எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications